உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இரு நாள் செயலமர்வு
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இரு நாள் செயலமர்வு இன்று திங்கட்கிழமை அக்கரைப்பற்றில் ஆரம்பமானது.
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கும் உள்ளளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை உள்ளளூர் ஆளுகை நிறுவகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.உதயக்குமார் தலைமையில் நடைபெற்று வரும் இச்செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ். சந்திரகாந்தன், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகள் உள்ளிட்ட 20 உள்ளூராட்சி மன்றங்களின் 200 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் மொழி மூல இச்செயலமர்வு அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கிலும் சிங்கள மொழி மூலமான செயலமர்வு அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியிலும் இடம்பெற்று வருகின்றன.
Comments
Post a Comment