ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையைஅரசாங்கம் பொறுப்பேற்பதென்பது பாவகரமான ஒரு நடவடிக்கையாகும்.
-அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிவிப்பு- ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் பொறுப்பேற்காதென அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலளார் சந்திப்பு தகவல் ஊடக அமைச்சில் இன்று (28) பிற்பகல் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்: ஒரு சமயத்துக்கு உரிய ஒரு பொறுப்பை அரசாங்கம் பொறுப்பேற்பதென்பது ஒரு பொருத்தமான நடவடிக்கை அல்ல. ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் பொறுப்பேற்பது முறையல்ல என்று மல்வத்தை பீடாதிபதி திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரும் கருத்துத் தெரிவித்துள்ளார். இது சில குழுவினரால் தோற்றுவிக்கப்பட்டுள்ள அர்த்தம் அற்ற பாவகரமான ஒரு நடவடிக்கையாகும். இப்பிரச்சினை தொடர்பில் இன்று அமைச்சர்களான ரவுப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதியுதீன் ஆகியோர் அமைச்சர் சம்பிக்க ரனவக்கவுடன் சுமுகமாகப் பேசிக்கொண்டிருப்பதை நான் அவதானித்தேன் என்றும் அமைச்சர் கூறினார்.