கல்முனையில் 55 டெங்கு நோயாளர்கள்; ஒருவர் மரணம்

கல்முனைப் பிரதேசத்தில் 2013 ஜனவரி தொடக்கம் இதுவரை 55 டெங்;கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக தெரிவித்துள்ளது.

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், கல்முனை மாநகர சபை, மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியன இணைந்து டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன.

இவர்களில் ஜனவரி மாதத்தில் 29 பேரும் பெப்ரவரி மாதத்தில் 26 பேரும் உள்ளடங்குகின்றனர். மேலும் இதில் கல்முனை, கல்முனைக்குடி பிரதேசத்தில் 24 நோயாளிகளும், மருதமுனை பிரதேசத்தில் 31 நோயாளிகளும் இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.றயீஸ் தெரிவித்தார். 

இதேவேளை இன்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் றயீஸ் தலைமையிலான குழுவினர் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதேவேளை, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நேற்று திங்கட்கிழமை வரை அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதியை சேர்ந்த 50 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர் என வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் கூறினார்.

இவர்களில் 13 பேர் தற்போது வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்