ஹலால் சான்றிதழ் வழங்குவதை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்- அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவிப்பு
நாட்டில் சார்சையை ஏற்படுத்தி வந்த ஹலால் சான்றிதழ் வழங்குவதை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளது.இம்மாநாடு கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் இடம்பெற்றது.
ஹலால் சான்றிதழ் விவகாரம் இன்று நாட்டில் சமூகங்களுக்கிடையே பிளவுகளைத் தோற்றுவிக்கும் ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது.
உலமா சபை இதன் மூலமாக நாட்டில் பிரச்சினைகள் தோற்றம் பெறுவதை ஒருபோதும் விரும்பவில்லை.
எனவே ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை அரசாங்கம் உடனடியாகப் பொறுப்பேற்பதுடன் சகல சமூகங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அதனை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என உலமா சபை தெரிவித்துள்ளது

Comments
Post a Comment