பளீல் மௌலானாவின் ஜனாஸா பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் நல்லடக்கம்;


Faleel Moulana
கிழக்கிலங்கையின் மூத்த கல்விமான்களுள் ஒருவரும் மார்க்க அறிஞரும் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளருமான மருதமுனை சமூக ஜோதி அல்ஹாஜ் அபுல்கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பளீல் மௌலானா (வயது-92) அவர்கள் இன்று திங்கட்கிழமை சுபஹ் தொழுகையை நிறைவேற்றி விட்டு அல்குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த நிலையில் காலமானார்.
இவர் யெமன் தேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட- அஹ்லுல் பைத் எனும் முஹம்மத் நபி 9ஸல்) அவர்களின் குடும்ப வாரிசைச் சேர்ந்தவரான கலீபத்துஷ் ஷாதிலி அஸ்செயயித் அஷ்ஷெய்க் மௌலவி ஐதுருஸ் மௌலானா அவர்களின் புதல்வர்களுள் ஒருவராவார்.
அத்துடன் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் ஆலோசகர் சட்டத்தரணி அமீருல் அன்ஸார் மௌலானா, அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அஹமதுல் அன்ஸார் மௌலானா, கல்முனை பற்றிமா கல்லூரி ஆங்கில ஆசிரியர் ஜின்னா மௌலானா ஆகியோரினதும் நான்கு பெண் பிள்ளைகளினதும் தந்தையான இவர் செனட்டர் மசூர் மௌலானா, மர்ஹூம் கலைச்சுடர் சக்காப் மௌலானா ஆகியோரின் சிறிய தந்தையுமாவார்.
அன்னாரது ஜனாஸா இன்று அஸர் தொழுகையின் பின்னர் மருதமுனையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில்  அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்