அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைப் பிரிவுகள் திறந்து வைப்பு
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட சத்திர சிகிச்சைக் கூடம், தீவிர கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவு மற்றும் ஆரம்ப சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றின் திறப்பு விழா நிகழ்வு வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மஹிபாலா பிரதம அதிதியாகவும், மருத்துவ சேவைகள் பணிப்பாளர் டாக்டர் லால் பனாப்பிட்டிய மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் இணைப்பாளர் டாக்டர் எம்.றிபாய் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் வைத்தியர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது வைத்தியசாலையின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடலும் இடம்பெற்றன.
Comments
Post a Comment