ஊஞ்சலில் ஆடிய சிறுமி சேலை கழுத்தில் இறுகி உயிரிழப்பு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் விநாயகபுரம் கிராமத் தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்று (25) திங்கள் கிழமை ஊஞ்சல் கட்டி விளை யாடிய சேலை கழுத்தில் இறுகியதால் ஸ்தலத் தில் உயிர் இழந்துள் ளார். மேற்படி கிராமத் தைச் சேர்ந்த பாக்கிய ராஜா சவுமியா என்றழைக்கப்படும் 12 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிர் இழந்துள்ளவராவார்.
வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் தரம் 07ல் கல்வி கற்கும் இம் மாணவி நேற்று விடுமுறை என்பதால் வீட்டு வளையில் சீலையினால் ஊஞ்சல் கட்டி விளையாடியுள்ளார்.
இவர் விளையாடிக் கொண்டு இருக்கும் வேளையில் ஊஞ்சலுக்காக கட்டப்பட்டிருந்த சீலைக்குள் கழுத்து இறுகியதால் இவர் உயிர் இழந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. மூன்று பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான இவர் சம்ப வேளையில் தனிமையில் விளையாடிக் கொண்டு இருந்ததாகவும் தெரிய வருகின்றது.
இம் மரணம் தொடர்பாக வாழை ச்சேனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment