முஸ்லிம் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான கண்டனத் தீர்மானம் கி.மா.சபையில் நிறைவேற்றம்!
நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் பொது பல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் இன்று சமர்பிக்கபட்ட கண்டனத் தீர்மானம் திருத்தங்களுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை திருமலையிலுள்ள மாகாண சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் மதிய இடைவேளைக்குப் பின்னர் இக்கண்டனப் பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.
இதன்போது ஹலால் தொடர்பில் ஆளும் தரப்பு சிங்கள- முஸ்லிம் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
அதவேளை மாகாணக் கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க முன்மொழிந்த திருத்தத்துடன் குறித்த கண்டனப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
Comments
Post a Comment