கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ்மற்றும் கிழக்கு முதல்வர் நஜீப் ஈரான் விஜயம்!
ஈரான் நாட்டின் தலைநகரமான டெக்ரானிற்கு கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நாளை வெள்ளிக்கிழமை (22.02.2013) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
டெக்ரான் நகரின் மேயரின் விசேட அழைப்பினை ஏற்று அங்கு செல்லும் கல்முனை முதல்வர் மூன்று நாட்கள் அங்கிருந்து கல்முனை நகரின் அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வினைத் திறனுள்ள செயலாற்றுகை தொடர்பாக பல்வேறுபட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
தனது காலப்பகுதிக்குள் தன்னால் முடியுமான அபிவிருத்திகளையும் உதவிகளையும் இம்மாநகரத்திற்கு செய்யவேண்டும் என்ற உத்வேகத்தோடு செயற்படும் முதல்வரின் இவ்விஜயம் கல்முனை நகரிற்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விஜயத்தின்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதும் பயணிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Comments
Post a Comment