சந்தாங்கேணி விளையாட்டு மைதானக் காணி அயலவர்களினால் சுவீகரிப்பு; முதல்வர் அதிரடி நடவடிக்கை!




கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தை சுற்றி உள்ள அயலவர்களினால் மைதானக் காணி சட்டவிரோதமாக சவீகரிக்கப்படு அமைக்கப்பட்டிருந்த சுற்று வேலிகள் மற்றும் குடியிருப்புக்கள் நேற்று  (27.02.2013) முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் பணிப்புரைக்கு அமைவாக அகற்றப்பட்டது.
சந்தாங்கேணி மைதானம் நாளுக்கு நாள் அயல்வாசிகளினால் சவீகரிக்கப்பட்டு வருவது  தொடர்பில் விளையாட்டுக் கழகங்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்ததனைத் தொடர்ந்து முதல்வர் தலைமையில் ஆனையாளர் ஜே.லியாகத்அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, மாநகர சபை உறுப்பினர்களான ஏ.நிசார்டீன், எச்.எம்.எம்.நபார், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்ட போது முதல்வரினால் மேற்படி பணிப்புரை விடுக்கப்பட்டது.




Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி