பொது பல சேனாவுக்கு எதிராக கி.மா. சபையில் கண்டனப் பிரேரணை; மு.கா.குழுத் தலைவர் ஜெமீல் சமர்ப்பிக்கிறார்
நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் பொது பல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் இன்று கண்டனப் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான் ஏ.எம்.ஜெமீல் இப்பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளார்.
இன்று காலை நடைபெற்ற கிழக்கு மாகாண சபையின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரேரணைக்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, இன்றைய நிகழ்ச்சி நிரலில் இப்பிரேரணை சேர்க்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வருகின்ற கிழக்கு மாகாண சபையின் இன்றைய மாதாந்த சபை அமர்வில் இன்னும் சில நிமிடங்களில் இப்பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இன்று மிகவும் அமைதியாக இருக்கின்ற நமது நாட்டில் ஹலால் விவகாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முஸ்லிம்கள் வேறுபல குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் பொது பல சேனா எனும் பௌத்த கடும்போக்குவாத அமைப்பு மேற்கொண்டு வருகின்ற தேவையற்ற நடவடிக்கைகளினால் நாட்டில் இன ஐக்கியத்திற்கு குந்தகம் ஏற்படுவதோடு வீண் குழப்பங்களுக்கும் வழி வகுக்கின்றன.
இச்செயற்பாடுகளை கிழக்கு மாகாண சபை ஏகமனதாக வன்மையாக கண்டிக்க வேண்டும் வேண்டும் என்பதுடன் பொது பல சேனா அமைப்பின் இனவாத செயற்பாடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இச்சபை வலியுறுத்த வேண்டும் எனவும் அப்பிரேரனையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Comments
Post a Comment