புனாணையில் முஸ்லிம் அதிகாரியிடம் இருந்து கார் பறிப்பு!



பிந்திய செய்தி 

வாழைச்சேனை, புனாணை பிரதேசத்தில் வைத்து முஸ்லிம் அதிகாரி ஒருவரிடம் இருந்து காரொன்றை கடத்திச் சென்ற இருவர் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் இறந்துள்ளனர்.
முன்னதாக துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்து இவ்விருவரும் தப்பிச்சென்று விட்டனர். எனினும் திம்புலாகல மலையில் இராணுவத்தினர் தேடுதல் நடத்தியதுடன் தப்பியோடுவதற்கு முயன்ற இருவர் மீதும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளர்.
அந்த துப்பாக்கி பிரயோகத்திலேயே இருவரும் சற்று முன்னர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் இருவரும் கொள்ளை கோஷ்டியின் உறுப்பினர்கள் என்றும் நகைகள் மற்றும்  பணங்களை கொள்ளையடித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இருவரும் புலிகளின் ஆதரவாளர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, புனாணை பிரதேசத்தில் வைத்து ஆயுதமுனையில் கார் ஒன்று கடத்தப்பட்டுள்ளது.
காத்தான்குடியை சேர்ந்த எச்.எம்.கசியுதீன் என்பவரின் பாவனையில் உள்ள காரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது. தனியார் வர்த்தக நிறுவனமொன்றில் விற்பனை மேற்பார்வையாளராக கடமையாற்றுகின்ற அவர் கண்டி நோக்கி இன்று காலை குறித்த நிறுவனத்திற்கு சொந்தமான காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது குறித்த பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய சிலர் காரை வழிமறித்துள்ளனர்.
காரிலிருந்து அவரை இறக்கி விட்டு ஆயுததாரிகள் காரை கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பில் எச்.எம்.கசியுதீன் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி