நீலாவணை சுனாமி வீட்டுத்திட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு


கல்முனை பொலிஸ் நிலையத்தினால் நடமாடும் செயலகம் பெரிய நீலாவணை சுனாமி வீட்டுத்திட்டத்தில் திறந்துவைக்கப்பட்டு இரண்டு வாரங்களாக இப்பிரதேச மக்களின் தேவைகளை நிறைவேற்றிவருகின்றது. 

கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த நாணயகார தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், அதிதிகளாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது நீலாவணை சுனாமி வீட்டுத்திட்ட வாழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

குறிப்பாக இவ்வீட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர்த்தொட்டி சீராக இயங்காமையினால் இப்பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டு அதனை சுத்திகரிப்பதற்கு பணிப்புரைவிடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டது. அத்தோடு இப்பிரச்சினை தொடர்ச்சியாக இருப்பதனால் இதற்கான நிரந்தர தீர்வினையும் மிக விரைவில் பெற்றுத்தருவதாக முதல்வர் வீட்டுத்திட்ட மக்களிடம் உறுதியளித்தார்.



Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்