கல்முனை கடற்கரைப்பள்ளி வீதி அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வு!


பிந்திய செய்தி 

கல்முனை கடற்கரைப்பள்ளி வீதி அபிவிருத்தி அங்குரார்ப்பண  நிகழ்வில் நடப்பட்ட நினைவு கல்  மற்றும் பதாகை என்பன இனம் தெரியாதவர்களால் அன்றிரவு உடைத்து சேதப் படுத்தப்பட்டுள்ளது 





கல்முனை கடற்கரைப்பள்ளி வீதி அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வு!



கல்முனை கடற்கரைப்பள்ளி வீதி அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வும் பொதுக் கூட்டமும் இன்று (27.02.2013) மாலை நடைபெற்றது.
இவ்வீதிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு கடற்கரை பள்ளி வீதியின் பிரதான வீதிச் சந்தியிலும் பொதுக் கூட்டம் அல்-பஹ்றியா மகா வித்தியாலய மண்டபத்திலும் நடைபெற்றது.
கடற்கரைப்பள்ளி வீதியானது 39 மில்லியன் ரூபா செலவில் இருமருங்கிலும் வடிகான் அமைத்து கொங்றீட் வீதி அமைப்பதற்கான வேலைத் திட்டத்தினை இந்நிகழ்வின் பிரதம அதிதி கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ் உதுமாலெப்பையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.





கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எ.பறகத்துள்ளா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது