Posts

வறிய மக்களுக்கு சம்மாந்துறையில் இலவச மருத்துவ முகாம்

Image
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள பிரபல சமூக சேவை அமைப்பான றிபாத் நண்பர்கள் ஒன்றியத்தின் 13வது வருட ஞாபகாத்தமாக சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள வருமானம் குறைந்த 300 குடும்பங்களுக்கு வைத்திய நிபுணர்களின் சேவையினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் எற்பாடு செய்யப்பட்ட இலவச வைத்திய முகாம் இன்று (18) காலையிலிருந்த சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம்.சியாத் தலைமையில் நடைபெற்று வருகின்றன. இந்த இலவச வைத்திய நிபுணத்துவ சேவையில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் விஷேட சத்திர சிகிச்சை நிபுணர்களான வைத்திய கலாநிதி ஏ.டபிள்யூ.எம்.சமீம், மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி எஸ்.எம்.காரியவசம், பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ஜயந்த விஜயபுர, தெஹியத்தகண்டிய வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி எம்.ஜே.எம்.எம்.சுல்பி மரைக்கார், எலும்பு நோய்களுக்கான வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி அஹமட் எம் மசூர், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி இப்லால் சுபைர், கல்முனை வடக்கு மற்றும் சம்மா

ரூபவாஹினி தலைவராக விமல் ரூபசிங்க

Image
யு.எம்.இஸ்ஹாக்  இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவராக விமல் ரூபசிங்க நியமிக் கப்பட்டுள்ளார். இவர் மத்திய சுற் றாடல் அதிகாரசபைத் தலைவராகவும் கலாசார அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாள ராகவும் ரூபவாஹினி தலைவராகவும் பணிபுரிந்த மொஹான் சமரநாயக்க அண்மையில் ரூபவாஹினி தலைவர் பதவியில் இருந்து விலகியது தெரிந்ததே.

இலங்கைக்கான சீன தூதுவருடன் நஜீப் ஏ மஜீத் சந்திப்பு

Image
இலங்கைக்கான சீன  உயர்ஸ்தானிகர்  ஜீ, ஆன்ங்ஹாவோ கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதை அவரது செயலகத்தில்  சந்தித்து உரையாடிய போது எடுக்கப்பட்ட படம்  இச்சந்திப்பின்  போது  கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 உள்ளுராட்சி மன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை   மேபடுத்துவதற்கான உதவிகளை வழங்குவதாக சீன  உயர்ஸ்தானிகர் முதலமைச்சரிடம் உறுதியளித்தார்.

கதீரின் மணல் நதி கன்னி கவிதைத்தொகுப்பு

Image
அன்பு நண்பர்களே நண்பர் கதிர் அவர்கள் கன்னி கவிதைத் தொகுப்பொன்றை நூலுருவில் கோர்த்துள்ளார்கள். “ மணல் நதி ” எனும் இத்தொகுப்பு இந்தியவில் உள்ள முன்னணி வெளியீட்டகங்களில் ஒன்றான கருப்புப் பிரதிகள் வெளியீட்டகத்தினால் ; வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் சென்னை புத்தக கட்சி அரங்கு இல. 287 ல் கருப்புப் பிரதிகள் பதிப்பகத்தினால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய வாசகர்கள், எழுத்துத்துறை சார்ந்தோர்கள் விமர்சகர்கள் மற்றும் ஏனையோர் அவரது நூலை பெற்றுக்கொண்டதாக தெரியப்படுத்தியுள்ளார்கள். இலங்கையில் உள்ள இத்துறைசார்ந்தோர்கள் நண்பர் கதீர் அவர்களின் “மணல் நதி” கவிதைத் தொகுப்பினை வெகு விரைவில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இலங்கையில் இந்நூலின் அறிமுக விழா இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2014.02.14 ம் திகதி கல்முனையில் நடைபெறும். இதில் கலந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் முன்கூட்டியே உங்கள் தொடர்புகளுக்கான தரவுகளை அனுப்பி வைப்பதன் மூலம் உங்களுக்காக அழைப்பிதழ்களை அனுப்பி வைக்கவும், புத்தகங்களை அனுப்பி வைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும் என நம்புகின்றோம். ஏற்பாட்டு

கல்முனை கார்மேல் பற்றிமா வித்தியாரம்ப விழா

Image
யு.எம்.இஸ்ஹாக்  அரசாங்கம் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் உத்தியோகபூர்வ நிகழ்வூகள் இன்று(16) நாடளாவிய ரீதியில் நடைபெற்றன. வடக்கு- கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் இந்நிகழ்வூ இன்று காலை நடைபெற்றதுடன் சமய கலாசார அம்சங்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வூகளில் அந்தந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைச்சர்கள் இபாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண அமைச்சர்கள்இகல்வி அதிகாரிகள் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். கல்முனை வலயக் கல்வி அலுவலக வலய மட்டத்திலான வித்தியாரம்ப விழா கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் அதிபர் அருட் சகோதரர் ஸ்டீபன் மத்தியூ தலைமையில் நடை பெற்றது. நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பி. எச். பியேசன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். முதலாம் தர மாணவர்கள் ஏனைய மாணவர்களால் மலர் கொடுத்து இனிப்பு வழங்கி வரவேற்க்கப்பட்டனர்.

லண்டனில் இஸ்லாமிய கலாச்சார மண்டபம்

Image
(மீரா அலி ராஜாய்) லண்டனில் வாழும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த இஸ்லாமிய கலாச்சார நிலையத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று வெகு சிறப்பாக மில்ட்டன்கீன்ஸ் நகரில் இடம் பெற்றது. இக் கலாச்சார மண்டபம் சுமார் 1 மில்லியன் பவுண்ட் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.    இந் நிகழ்வுக்கு SLCFMK யின் தலைவர் தாஜுதீன் லெப்‌பே அவர்கள் தலைமை தாங்கினார்கள். இதில் விசேட அதிதியாக இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த மௌலவி அஷ் ஷெய்க் எம்.எம்.கலாமுல்லாஹ், மற்றும்  மில்ட்டன்கீன்ஸ் நகர முதல்வர் பிராயின் வைட், மில்ட்டன்கீன்ஸ் சமூக அமைப்பு அததியட்ச்சகர் பார்ட் கெம்பார் ,மற்றும் அதிதிகளும், பொது மக்களும்  கலந்து கொண்டனர்

66வது சுதந்திர தின வைபவம்

Image
யு.எம்.இஸ்ஹாக் 66வது  சுதந்திர தின வைபவத்தை தேசிய ரீதியில் நடாத்துவதற்கான பொது நிருவாக அமைச்சின் 03/2014 ஆம் இலக்க அரசாங்க நிருவாக மற்றும் உள்  நாட்டு அலுவல்கள் அமைச்சின் சுற்று நிருபம் வெளியிட்டு வைக்கப் பட்டுள்ளது. அரசாங்க நிருவாக மற்றும் உள்  நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பீ.வீ.அபேகோன்  ஒப்பமிட்டு  வெளியிட்டுள்ள அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 66வது  சுதந்திர தினத்தை குறிக்கும் முகமாக 2014 பெப்ரவரி 03,04 ஆந்  திகதிகளில் அரசாங்க அலுவலகங்களாக பேணப்படுகின்ற சகல கட்டடங்களையும் விழாக்கோல ஒளிவிளக்குகளாலும் ,பலவண்ணக் கொடிகளாலும்  அலங்கரிப்பதற்க்கும் அக்கட்டடங்களில் தேசிய கொடியை  பறக்க விடுவதற்கும்  அரசாங்கத்தினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சகல அமைச்சு செயலாளர்கள் ,மாகான சபைகளின் பிரதம செயலாளர்கள் , திணைக்களங்கள் ,கூட்டுத்தாபனங்கள் ,நியதி சபைகளின்  தலைவர்களுக்கும் இந்த சுற்று நிருப அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கப்பல் பார்க்க போன கதை

Image
திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள நுாலகக் கப்பலைப் பார்க்க முடியாமல் கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய இடங்களிலிருந்து சென்ற மாணவர்களும் பெற்றோரும் திருப்பி அனுப்பப் பட்டுள்னர். சன  நெரிசல் மற்றும் பொது மக்களின்   தவறான  நடவடிக்கைகள் என்பன தடுக்கப்பட்டமைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது பற்றி ஏற்பாட்டாளர்களை வினவிய போது இவ்வாறான பெருந்திரளான மக்களை  நாம் எதிர்பார்க்கவில்லை எனக்கூறியுள்ளனர். எது எவ்வாறான போதிலும் சிரமங்களுக்கும் செலவுகளுக்கும் மத்தியில்  இவ்வாறான ஏமாற்றம் நிகழ்ந்துள்ளமை குறித்துப் பலரும் தங்களின் அதிருப்தியை தெரிவிக்கின்றனர்

கல்முனை மாநகர சபை ஆணையாளரினால் நியமிக்கப் பட்ட நடுகட்டு உத்தியோகத்தர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

Image
யு.எம்.இஸ்ஹாக் கல்முனை மாநகர சபை ஆணையாளரினால் நியமிக்கப் பட்ட நடுகட்டு உத்தியோகத்தர்கள் கல்முனை மாநகர சபையில்  மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கல்முனை மாநகர சபையினால் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட நடுக்கட்டு  உத்தியோகத்தர்களின் (வரி அறவீடடாளர்கள்) சேவை முடிவுறுத்தப்பட்டுள்ளதால் அவர்களிடம் சோலை வரிகளை செலுத்த வேண்டாம் என மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொது மக்களைக் கேட்டுள்ளார். கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் வீடு வீடாகச் சென்று சோலை வரிகளை அறவிடும் பொருட்டு கடந்த 2012ஆம் ஆண்டு 25 பேர் தற்காலிக அடிப்படையில் நடுக்கட்ட உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டனர். எனினும் அவர்களுடைய சேவை 2013 டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவுறுத்தப்பட்டுள்ளதால், தங்கள் வீடுகளுக்கு வந்து சோலைவரிக் கட்டணங்களை யாராவது கோரினால், அவர்களிடம் அதனைச் செலுத்த வேண்டாம் என மாநகர ஆணையாளர், பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றார். அதேவேளை சோலை வரி செலுத்த வேண்டிய பொது மக்கள், கல்முனை மாநகர சபைக்கு நேரடியாக வருகை தந்து- உரிய அதிகாரிகளிடம் அதனைச் செலுத்தி- பற்றுச் சீட்டை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் பொது மக்

கல்முனையில் நடை பெற்ற மீலாத் விழா நிகழ்வு

Image
படங்கள்  

கவனிக்குமா ? கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபை

Image

நட்பிட்டிமுனயில் முச்சக்கரவண்டி விபத்து சாரதி படுகாயம்

Image
யு.எம்.இஸ்ஹாக் கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட  நற்பிட்டிமுனை கிராமத்தில்  இன்று நடை பெற்ற  முச்சக்கர வண்டிவிபத்தில்  சாரதி  படுகாயமாடைந்த நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இவ்விபத்து இன்று பகல் 2.30 மணிக்கு கல்முனை கிட்டங்கி வீதியில்  உள்ள நட்பிட்டிமுனை  பொது விளையாட்டு மைதானம் அருகே இடம் பெற்றுள்ளது. முச்சக்கர வண்டி  வேகமாக செல்லவில்லை என்றும்  ஆங்கிலப் படங்களில் இடம் பெறுவது போன்று  விபத்து காட்சி தென்பட்டதாக  விபத்தை நேரடியாக பார்த்த  அயல் வீட்டவர்கள் தெரிவிக்கின்றனர் . விபத்து தொடர்பாக கல்முனை பொலிசார் விசாரணை செய்கின்றனர் . விபதுக்குள்ளானவரின்  இரண்டு கால்களிலும்  முறிவு ஏற்பட்டிருப்பதாகவும்   அவசர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

பொதுபல சேனாவுக்கு எதிராக மனித உரிமை மீறல் மற்றும் உயர் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல்

Image
(அஷ்ரப் ஏ. சமத்) (JM)பொதுபல சேனாவுக்கு எதிராக மனித உரிமை மீரல் மற்றும் உயர் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளது. பொதுபல சேனாவுக்கு எதிராக மனித உரிமை மீரல் மற்றும் உயர் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்குதல் செய்வதற்காக  முஸ்லீம் அமைப்புக்கள் புத்திஜீவிகள் சட்டத்தரணிகள் ஊடகவியளார்கள் எதிர்வரும் புதன்கிழமை (15)ஆம் திகதி பி.பகல் கொழும்பு 7 ல் உள்ள இல 22 ரொஸமிட் பிளேசில் உள்ள அஸ்ரப் ஹீசைன் வீட்டில் ஒன்று கூடுகின்றனர். இலங்கையில் வாழும் முஸ்லீம்களுக்கெதிராக பொதுபலசேனா ,இராவணபலய சிகல உருமைய போன்ற கட்சிகளுடன் இன்னும் சில அதிதீவிர போக்குடைய பௌத்த அமைப்புக்களது இண்னல்கள் தொடர்ந்தவண்னமே இருந்து வருகின்றன.  ஒவ்வொரு நாளும் சிங்கள மொழிகளில் வரும் ஊடகங்களில் முஸ்லீம்களது கலை, கலாச்சாரம், மதம் மற்றும் உணவு, உடை அவர்களது வர்த்தகம் போன்றவற்றினை விமர்சித்தும் முஸ்லீம்களை இண்னல்களுக்கும் மன உலைச்சலுக்கும் மேற்படி அமைப்புக்கள் ஏற்படுத்தி வருகின்றன. இதனை அரசாங்கமோ அல்லது அரசில் உள்ள முஸ்லீம் அமைச்சர்கள் கட்சிகள் இதனை கட்டுப்படுத்த தவறிவிட்டன. அத்துடன் முஸ்லீம்களும்

கல்முனை வலயகல்வி அலுவலகதுகுட்பட்ட ஆறு அதிபர் சேவையில் உள்ளவர்களுக்கு உடனடி இடமாற்ற உத்தரவு

Image
கல்முனை  வலயகல்வி அலுவலகதுகுட்பட்ட  ஆறு  அதிபர்  சேவையில் உள்ளவர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண கல்வி செய­லா­ள­ரினால்  அதிபர் கடமையினை  பொறுப்பெடுக்குமாறு இவர்களுக்கான இடமாற்றக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த அதிபர் சேவையில் உள்ள ஆறு அதிபர்களும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் பதில் அதிபர்களாகவும்,உதவி அதிபர்களாகவும்  கடமையாற்றுகின்றனர் இதன் பிரகாரம் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இருந்து  அதிபர் சேவையில் உள்ளவர்களான றிபா ஹூசைன் மரு­த­முனை ஸம்ஸ் மத்திய  கல்­லூ­ரிக்கும் ,அமீரா லியாக்கத் அலி மாளிகைக்காடு சபீனா வித்­தி­யா­ல­யத்­திற்கும், திரு­மதி பனூன் ஏ.கரீம் சாய்ந்­த­ம­ருது மல்­ஹருஸ் சம்ஸ் மகா வித்­தி­யா­ல­யத்­திற்கும் ,ஏ.எம்.றஃமான் இஸ்­லா­மாபாத் வித்­தி­யா­ல­யத்­திற்கும், எம்.சாதிக் மரு­த­முனை அக்பர் வித்­தி­யா­ல­யத்­திற்கும், அஸ்மி காரி­யப்பர் நிந்­தவூர் அல்­பத்­றியா வித்தியாலயத்திற்கும்  அதிபர் கடமையினை பொறுப்பெடுக்குமாறு  இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இடமாற்றம் செய்யப்படும் பாடசாலைகளில்  ஆசிரியர் சேவை சே

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் ஒன்பதாவது வலயக்கல்விப் பணிப்பாளராக எம்.எஸ்.அப்துல் ஜெலீல் கடமைகளை பொறுப் பேற்றுள்ளார் .

Image
யு.எம்.இஸ்ஹாக் கல்முனை வலயக் கல்வி அலுவலத்தின் ஒன்பதாவது வலயக்கல்விப்  பணிப்பாளராக  மருதமுனையை சேர்ந்த கல்விநிருவாக சேவை அதிகாரி  ஜனாப் எம்.எஸ்.அப்துல் ஜெலீல்  வியாழக்கிழமை  09.01.2014 உத்தியோக பூர்வமாக தனது கடமைகளை  பொறுப்பேற்றார் .  காலை 8.30 மணிக்கு அலுவலகத்துக்கு வருகை தந்த வலயக்கல்விப் பணிப்பாளரை பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள் உதவிக்கல்விப் பணிப்பாளர்கள்,கோட்டக்  கல்விப் பணிப்பாளர்கள் ,கணக்காளர் ,நிருவாக உத்தியோகத்தர், மற்றும் ஏனைய  உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும்  மாலை அணிவித்து வரவேற்று கௌரவித்தனர். ஒலுவில் அல் -ஹம்ர வித்தியாலயத்தில் ஆசிரியராக தனது பணியை ஆரம்பித்த வலயக்கல்விப் பணிப்பாளர் ஜனாப் ஜலீல்  மருதமுனை அல் -மானார் மதிய கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து  கல்வி நிருவாக  சேவைக்குள்  உள்வாங்கப்பட்டு  கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில்  உதவிக்கல்விப் பணிப்பாளராகவும் ,பிரதிகல்விப் பணிப்பாளராகவும்  பணியாற்றி  மீண்டும் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில்  பிரதிக் கல்விப்பணிப்பாளராக கடமை புரிந்து  சிறிது  காலம் பதவி உயர்வு பெற்று வலயக்கல்விப் பணிப்பாளராக  ப

கல்முனை கல்வி நிலை மேலும் உயர வேண்டும்

Image
யு.எம்.இஸ்ஹாக் கல்முனை கல்வி வலய பாட சாலைகளின்  கல்வி நிலை மத்திமமாக  காணப்படுகின்றது  அந்த நிலை எதிர்காலத்தில் மாற்றம் அடைந்து உயர் நிலைக்கு வரவேண்டும் . அந்த உயர் நிலையை அடைய ஆசிரியர்கள் மட்டும்  பொறுப்பு  வாய்ந்தவர்கள் அல்ல  வலயக்கல்வி அலுவலகத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்களும்  ஒத்துழைக்க வேண்டும் என  கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர்  யு.எல்.எம்.ஹாசிம்  பிரியாவிடை வைபவத்தின் போது  உரையாற்றுகையில் தெரிவித்தார். கடந்த 2013 பெப்ரவரி மாதம் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக கடமை ஏற்ற வலயக்கல்விப் பணிப்பாளர் ஓராண்டு காலம் சேவயாற்றியதன்  பின்னர்  மீண்டும்  சம்மாந்துறை வலயக்கல்வி பணிமனைக்கு  இடமாற்றம் செய்யப்பட்டதற்கு அமைய  கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில்  இன்று 08.01.2014 பிரியாவிடை வைபவம் நடை பெற்றது. கல்முனை வலயகல்வி அலுவலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.ஜுனைதீன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  கணக்காளர்,பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், பொறியியலாளர்  உட்பட உத்தியோகத்தர்கள் கலந்து  கொண்டனர்.

ஹலால் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தியது ஜம்இயத்துல் உலமா

Image
புதிய நிறுவனமொன்றினூடாக பணிகள் * புதிய இலட்சினையும் அறிமுகம் * தேசிய ஒழுங்கு, அபிவிருத்தி பேணும் வகையில் முடிவு * முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை நிறுத்த தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பணிகள் சேவைநோக்குள்ள புத்திஜீவிகள் தொழில் வல்லுநர்கள் உள்ளடங்கிய உத்தரவாதமுள்ள நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த உலமா சபை, புதிய நிறுவனத்தை கண்காணித்தல், வழி நடத்துதல் போன்றவிடயங்களை தாம் முன்னெடுக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள உலமா சபை தேசிய பொருளாதார அபிவிருத்தியையும் சமூக ஒழுங்கையும் பேணிப் பாதுகாப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் நாட்டிலுள்ள ஏனைய தரச் சான்றிதழ் வழங்கும் நிறுவன ங்கள் போன்று புதிய நிறுவனமும் செயற்பட இருப்ப தாகவும் தெரிவித்து ள்ளது. இலாப நோக்கமின்றி சேவை நோக்கத்தில் இயங்கும் வகையில் புத்திஜீவிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அடங்கிய 10 பேர் இந்த நிறுவனத்துக்கு நியமிக்கப்பட்டு ள்ளனர். இது தவி

திருட்டுத்தனமாக களவாடி செல்லப்பட்ட டிப்பர் வாகனமும் அதன் சாரதியும் கைது

Image
  (யு.எம்.இஸ்ஹாக்) ஒருமாதத்துக்கு முன்னர் சாய்ந்தமருதில் திருட்டுத்தனமாக களவாடி செல்லப்பட்ட டிப்பர் வாகனம் ஒன்று போலி இலக்கத்தகட்டுடன் கல்முனை பொலிசாரினால் இங்கினியாகல  சியம்பலாந்துவ பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டு இன்று 06.01.2014 கல்முனை நீதிவான் நீதிமன்றில் வாகனமும் அதனை ஓட்டிவந்த சாரதியும் ஆஜர் படுத்தப்பட்டுள்ளது . இது சம்பந்தமாக கல்முனை பொலிசார் தகவல் தருகையில் கடந்த 2013.12.16 ஆந்  திகதி கல்முனை போலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் வைத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த   EP-LH-8525 இலக்க  டிப்பர் ரக கனரக வாகனம் களவு போயுள்ளதாக அதன் உரிமையாளர் முகம்மது இஸ்மாயில் அப்துல் ரஹீம் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்தார் .   குறித்த களவு சம்பந்தமாக கல்முனை பொலிஸ்  தலைமைக் காரியாலய பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு.ஏ.கப்பார் தலைமையில் பெருங்குற்ற தடுப்பு பொலிஸ் அதிகாரிகள் நடாத்திய விசாரணையின் பலனாக குறித்த வாகனம் LH-8034 போலி இலக்கத்துடன் நேற்று 05.01.2014  வாகனமும் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டு இன்று  நீதிமன்றி ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர் . போலி இக்கத

தென்கிழக்கு சமூகத்தினால் கலாநிதி சுக்ரி கௌரவிக்கப்பட்டார்

Image
பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளரும், இஸ்லாமிய ஆய்வாளரும், இலங்கையின் தலைசிறந்த இஸ்லாமிய கல்விமானுமான கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு தென்கிழக்கு சமூகத்தினால் இன்று 2014.01.05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 6.00 மணிக்கு  சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடாத்தப் பட்டது. தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் மௌலவி தலைமையில் இடம் பெற்ற  இந்நிகழ்வில் தென்கிழக்கு உலமாக்கள், பல்கலைக்கழக, கல்விக் கல்லூரி விரிவுரையாளர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், புத்திஜீவிகள் உயர் அதிகாரிகள்  உட்பட  முன்னாள்  வர்த்தக வாணிப அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் என பலர் கலந்து சிறப்பித்தனர்  இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவரும், பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை பேராசிரியருமான கலாநிதி.எம்.எஸ்.எம்.அனஸ், கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்கள் பற்றிய விசேட உரை நிகழ்த்தினார்.   மேற்படி நிகழ்வில் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்கள் பற்றிய பல சிறப்புரைகளும் நிகழ்த்தப் பட்டதோடு  வா