வறிய மக்களுக்கு சம்மாந்துறையில் இலவச மருத்துவ முகாம்

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள பிரபல சமூக சேவை அமைப்பான றிபாத் நண்பர்கள் ஒன்றியத்தின் 13வது வருட ஞாபகாத்தமாக சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள வருமானம் குறைந்த 300 குடும்பங்களுக்கு வைத்திய நிபுணர்களின் சேவையினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் எற்பாடு செய்யப்பட்ட இலவச வைத்திய முகாம் இன்று (18) காலையிலிருந்த சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம்.சியாத் தலைமையில் நடைபெற்று வருகின்றன.


இந்த இலவச வைத்திய நிபுணத்துவ சேவையில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் விஷேட சத்திர சிகிச்சை நிபுணர்களான வைத்திய கலாநிதி ஏ.டபிள்யூ.எம்.சமீம், மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி எஸ்.எம்.காரியவசம், பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ஜயந்த விஜயபுர, தெஹியத்தகண்டிய வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி எம்.ஜே.எம்.எம்.சுல்பி மரைக்கார், எலும்பு நோய்களுக்கான வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி அஹமட் எம் மசூர், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி இப்லால் சுபைர், கல்முனை வடக்கு மற்றும் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகார்த்த வைத்தியசாலை என்பவற்றின் இரத்த வங்கி பொறுப்பதிகாரியும் சம்மாந்துறை கோல்டன் சிட்டி லயன்ஸ் கழகத்தின் தலைவருமான லயன் டாக்டர் எம்.ஐ.எம்.சிறாஜ், சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உளநல வைத்திய அதிகாரி எம்.ஜே.நௌபல், டாக்டர் ஏ.றிஸ்வான், டாக்டர் எம்.றமீஸ், கிழக்க மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சின் பொதுசன தொடர்பு அதிகாரி யூ.எல்.பஸீர், இணைப்பதிகாரி எம்.ஐ.எம்.தபீக், சம்மாந்துறை கோல்டன் சிட்டி லயன்ஸ் கழகத்தின் சிரேஷ்ட தலைவர் எம்.இப்றாலெப்பை உட்பட பல வைத்தியர்களும் தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள், லயன்ஸ் கழக உறுப்பினர்கள், தொண்டர்களாக பாடசாலை மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்