திருட்டுத்தனமாக களவாடி செல்லப்பட்ட டிப்பர் வாகனமும் அதன் சாரதியும் கைது
(யு.எம்.இஸ்ஹாக்)
ஒருமாதத்துக்கு முன்னர் சாய்ந்தமருதில் திருட்டுத்தனமாக களவாடி செல்லப்பட்ட டிப்பர் வாகனம் ஒன்று போலி இலக்கத்தகட்டுடன் கல்முனை பொலிசாரினால் இங்கினியாகல சியம்பலாந்துவ பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டு இன்று 06.01.2014 கல்முனை நீதிவான் நீதிமன்றில் வாகனமும் அதனை ஓட்டிவந்த சாரதியும் ஆஜர் படுத்தப்பட்டுள்ளது .
இது சம்பந்தமாக கல்முனை பொலிசார் தகவல் தருகையில் கடந்த 2013.12.16 ஆந்
திகதி கல்முனை போலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் வைத்து
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த EP-LH-8525 இலக்க டிப்பர் ரக கனரக வாகனம்
களவு போயுள்ளதாக அதன் உரிமையாளர் முகம்மது இஸ்மாயில் அப்துல் ரஹீம் கல்முனை
பொலிஸில் முறைப்பாடு செய்தார் .
குறித்த களவு சம்பந்தமாக கல்முனை பொலிஸ் தலைமைக் காரியாலய பொறுப்பதிகாரி
ஏ.டபிள் யு.ஏ.கப்பார் தலைமையில் பெருங்குற்ற தடுப்பு பொலிஸ் அதிகாரிகள்
நடாத்திய விசாரணையின் பலனாக குறித்த வாகனம் LH-8034 போலி இலக்கத்துடன் நேற்று
05.01.2014 வாகனமும் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றி
ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர் . போலி இக்கத்துக்குரிய வாகனமும் விரைவில்
பொலிசாரினால் கைப்பற்றப்படும் என பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார் .
Gd knowledge. I wish for kalmunai police. ..
ReplyDelete