கதீரின் மணல் நதி கன்னி கவிதைத்தொகுப்பு



அன்பு நண்பர்களே
நண்பர் கதிர் அவர்கள் கன்னி கவிதைத் தொகுப்பொன்றை நூலுருவில் கோர்த்துள்ளார்கள். மணல் நதி எனும் இத்தொகுப்பு இந்தியவில் உள்ள முன்னணி வெளியீட்டகங்களில் ஒன்றான கருப்புப் பிரதிகள் வெளியீட்டகத்தினால்; வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் சென்னை புத்தக கட்சி அரங்கு இல. 287ல் கருப்புப் பிரதிகள் பதிப்பகத்தினால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய வாசகர்கள், எழுத்துத்துறை சார்ந்தோர்கள் விமர்சகர்கள் மற்றும் ஏனையோர் அவரது நூலை பெற்றுக்கொண்டதாக தெரியப்படுத்தியுள்ளார்கள்.
இலங்கையில் உள்ள இத்துறைசார்ந்தோர்கள் நண்பர் கதீர் அவர்களின் “மணல் நதி” கவிதைத் தொகுப்பினை வெகு விரைவில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இலங்கையில் இந்நூலின் அறிமுக விழா இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2014.02.14ம் திகதி கல்முனையில் நடைபெறும்.
இதில் கலந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் முன்கூட்டியே உங்கள் தொடர்புகளுக்கான தரவுகளை அனுப்பி வைப்பதன் மூலம் உங்களுக்காக அழைப்பிதழ்களை அனுப்பி வைக்கவும், புத்தகங்களை அனுப்பி வைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும் என நம்புகின்றோம்.

ஏற்பாட்டுக்குழு
தொடர்புகளுக்கு: sairulcadeer@gmail.com, barakathmmc@gmail.com


Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்