கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் ஒன்பதாவது வலயக்கல்விப் பணிப்பாளராக எம்.எஸ்.அப்துல் ஜெலீல் கடமைகளை பொறுப் பேற்றுள்ளார் .

யு.எம்.இஸ்ஹாக்
கல்முனை வலயக் கல்வி அலுவலத்தின் ஒன்பதாவது வலயக்கல்விப்  பணிப்பாளராக  மருதமுனையை சேர்ந்த கல்விநிருவாக சேவை அதிகாரி  ஜனாப் எம்.எஸ்.அப்துல் ஜெலீல்  வியாழக்கிழமை  09.01.2014 உத்தியோக பூர்வமாக தனது கடமைகளை  பொறுப்பேற்றார் .
 காலை 8.30 மணிக்கு அலுவலகத்துக்கு வருகை தந்த வலயக்கல்விப் பணிப்பாளரை பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள் உதவிக்கல்விப் பணிப்பாளர்கள்,கோட்டக்  கல்விப் பணிப்பாளர்கள் ,கணக்காளர் ,நிருவாக உத்தியோகத்தர், மற்றும் ஏனைய  உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும்  மாலை அணிவித்து வரவேற்று கௌரவித்தனர்.
ஒலுவில் அல் -ஹம்ர வித்தியாலயத்தில் ஆசிரியராக தனது பணியை ஆரம்பித்த வலயக்கல்விப் பணிப்பாளர் ஜனாப் ஜலீல்  மருதமுனை அல் -மானார் மதிய கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து  கல்வி நிருவாக  சேவைக்குள்  உள்வாங்கப்பட்டு  கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில்  உதவிக்கல்விப் பணிப்பாளராகவும் ,பிரதிகல்விப் பணிப்பாளராகவும்  பணியாற்றி  மீண்டும் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில்  பிரதிக் கல்விப்பணிப்பாளராக கடமை புரிந்து  சிறிது  காலம் பதவி உயர்வு பெற்று வலயக்கல்விப் பணிப்பாளராக  பனி புரிந்த  ஜெலீல் அவர்கள்  நேற்று தொடக்கம்  கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளராக  கிழக்குமாகான  ஆளுனரால்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.




கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் பணிப்பாளர்களாக  ஐ.எம்.இஸ்ஸதீன்,ஏ.எம்.சாபிதீன் ,மருதூர் ஏ.மஜீத் ,யு.எல்.அலியார்,காதர்  இப்ராஹீம்,எம்.ரீ.ஏ.நிஷாம் ,எம்.ரீ.ஏ.தௌபீக்,யு.எல்.எம்.ஹாசீம்  ஆகியோர் வரிசையில்  ஒன்பதாவது  வலயக்கல்விப் பணிப்பாளராக  எம்.எஸ்.அப்துல் ஜெலீல்  கடமைகளை பொறுப்  பேற்றுள்ளார் .
அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவிக்கின்றீர்கள்  அந்த ஒத்துழைப்பு பூரணமாக எனக்கு கிடைத்தால் உங்களின் உதவியுடன் கல்முனை கல்வி வலயத்தை கிழக்கில் மட்டுமல்ல இந்த நாட்டில் பெயர் சொல்லும் வலயமாக மாற்ற முடியும் என அவர் அங்கு உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்