கல்முனை
பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை கிராமத்தில் இன்று நடை பெற்ற
முச்சக்கர வண்டிவிபத்தில் சாரதி படுகாயமாடைந்த நிலையில் கல்முனை வடக்கு ஆதார
வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இவ்விபத்து இன்று பகல் 2.30 மணிக்கு கல்முனை கிட்டங்கி வீதியில்
உள்ள நட்பிட்டிமுனை பொது விளையாட்டு மைதானம் அருகே இடம் பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டி வேகமாக செல்லவில்லை என்றும் ஆங்கிலப் படங்களில் இடம்
பெறுவது போன்று விபத்து காட்சி தென்பட்டதாக விபத்தை நேரடியாக பார்த்த
அயல் வீட்டவர்கள் தெரிவிக்கின்றனர் .
விபத்து தொடர்பாக கல்முனை பொலிசார் விசாரணை செய்கின்றனர் .
விபதுக்குள்ளானவரின் இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்டிருப்பதாகவும்
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வைத்தியசாலை
வட்டாரம் தெரிவிக்கின்றது.
Comments
Post a Comment