பொதுபல சேனாவுக்கு எதிராக மனித உரிமை மீறல் மற்றும் உயர் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல்
(அஷ்ரப் ஏ. சமத்)
(JM)பொதுபல சேனாவுக்கு எதிராக மனித உரிமை மீரல் மற்றும் உயர் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பொதுபல சேனாவுக்கு எதிராக மனித உரிமை மீரல் மற்றும் உயர் நீதிமன்றங்களில்
வழக்குத் தாக்குதல் செய்வதற்காக முஸ்லீம் அமைப்புக்கள் புத்திஜீவிகள்
சட்டத்தரணிகள் ஊடகவியளார்கள் எதிர்வரும் புதன்கிழமை (15)ஆம் திகதி பி.பகல்
கொழும்பு 7 ல் உள்ள இல 22 ரொஸமிட் பிளேசில் உள்ள அஸ்ரப் ஹீசைன் வீட்டில்
ஒன்று கூடுகின்றனர்.
இலங்கையில் வாழும் முஸ்லீம்களுக்கெதிராக பொதுபலசேனா ,இராவணபலய சிகல உருமைய
போன்ற கட்சிகளுடன் இன்னும் சில அதிதீவிர போக்குடைய பௌத்த அமைப்புக்களது
இண்னல்கள் தொடர்ந்தவண்னமே இருந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் சிங்கள
மொழிகளில் வரும் ஊடகங்களில் முஸ்லீம்களது கலை, கலாச்சாரம், மதம் மற்றும்
உணவு, உடை அவர்களது வர்த்தகம் போன்றவற்றினை விமர்சித்தும் முஸ்லீம்களை
இண்னல்களுக்கும் மன உலைச்சலுக்கும் மேற்படி அமைப்புக்கள் ஏற்படுத்தி
வருகின்றன.
இதனை அரசாங்கமோ அல்லது அரசில் உள்ள முஸ்லீம் அமைச்சர்கள் கட்சிகள் இதனை
கட்டுப்படுத்த தவறிவிட்டன. அத்துடன் முஸ்லீம்களும் பொறுமை கார்த்து
வருகின்றனர். இருந்தும் இவ் இயக்கங்களது செயற்பாடுகள் நாளுக்கு நாள்
முஸ்லீம்களுக்கு எதிராக அதிகரித்த வண்னமே உள்ளன. அத்துடன் இன்றைய
ஞயிற்றுக்கிழமை களில் வெளிவந்துள்ள சகல பத்திரிகைகளிலும் பொதுபலசேனவின்
செயலாலர் ஞானத்தேரர் நேர்காணலில் உள்ள ஆக்கங்களில் முஸ்லீம்களை பற்றியும்
ஹலால் உணவு உடை இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்கள் பற்றியும் சாடியுள்ளார்.
இனியும் முஸ்லீம்கள் மௌனம் சாதிக்க முடியாது. மேற்படி விடயமாக
கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் புதன் கிழமை சர்வதேச வை.எம்.எம். ஏ
தலைவருமான அஸ்ரப் ஹூசைன் இல்லத்தில் தீர்மாணங்கள் மற்றும் மனித உரிமை மீறல்
வழக்கு, உயர் நீதிமன்றில் வழக்குகளை தாக்கல் செய்வது சம்பந்தமாக
கூட்டமொன்று நடைபெறவுள்ளது. மேலும் சில ஆலோசனைகளை மேற்கொள்வதற்கும்
முஸ்லீம் ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், சட்டத்தரணிகள், இயக்கங்களுக்கும்
அஸ்ரப் ஹுசைன் அழைப்பு விடுத்துள்ளார்.
Comments
Post a Comment