கல்முனை கல்வி நிலை மேலும் உயர வேண்டும்






யு.எம்.இஸ்ஹாக்
கல்முனை கல்வி வலய பாட சாலைகளின்  கல்வி நிலை மத்திமமாக  காணப்படுகின்றது  அந்த நிலை எதிர்காலத்தில் மாற்றம் அடைந்து உயர் நிலைக்கு வரவேண்டும் . அந்த உயர் நிலையை அடைய ஆசிரியர்கள் மட்டும்  பொறுப்பு  வாய்ந்தவர்கள் அல்ல  வலயக்கல்வி அலுவலகத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்களும்  ஒத்துழைக்க வேண்டும் என  கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர்  யு.எல்.எம்.ஹாசிம்  பிரியாவிடை வைபவத்தின் போது  உரையாற்றுகையில் தெரிவித்தார்.

கடந்த 2013 பெப்ரவரி மாதம் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக கடமை ஏற்ற வலயக்கல்விப் பணிப்பாளர் ஓராண்டு காலம் சேவயாற்றியதன்  பின்னர்  மீண்டும்  சம்மாந்துறை வலயக்கல்வி பணிமனைக்கு  இடமாற்றம் செய்யப்பட்டதற்கு அமைய  கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில்  இன்று 08.01.2014 பிரியாவிடை வைபவம் நடை பெற்றது.



கல்முனை வலயகல்வி அலுவலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.ஜுனைதீன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  கணக்காளர்,பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், பொறியியலாளர்  உட்பட உத்தியோகத்தர்கள் கலந்து  கொண்டனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்