கல்முனை வலயகல்வி அலுவலகதுகுட்பட்ட ஆறு அதிபர் சேவையில் உள்ளவர்களுக்கு உடனடி இடமாற்ற உத்தரவு
கல்முனை வலயகல்வி அலுவலகதுகுட்பட்ட ஆறு அதிபர் சேவையில்
உள்ளவர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண கல்வி
செயலாளரினால் அதிபர் கடமையினை பொறுப்பெடுக்குமாறு இவர்களுக்கான
இடமாற்றக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த அதிபர் சேவையில் உள்ள ஆறு அதிபர்களும் கல்முனை மஹ்மூத் மகளிர்
கல்லூரியில் பதில் அதிபர்களாகவும்,உதவி அதிபர்களாகவும் கடமையாற்றுகின்றனர்
இதன் பிரகாரம் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இருந்து அதிபர்
சேவையில் உள்ளவர்களான றிபா ஹூசைன் மருதமுனை ஸம்ஸ் மத்திய
கல்லூரிக்கும் ,அமீரா
லியாக்கத் அலி மாளிகைக்காடு சபீனா வித்தியாலயத்திற்கும், திருமதி
பனூன் ஏ.கரீம் சாய்ந்தமருது மல்ஹருஸ் சம்ஸ் மகா
வித்தியாலயத்திற்கும் ,ஏ.எம்.றஃமான் இஸ்லாமாபாத்
வித்தியாலயத்திற்கும், எம்.சாதிக் மருதமுனை அக்பர்
வித்தியாலயத்திற்கும், அஸ்மி காரியப்பர் நிந்தவூர் அல்பத்றியா
வித்தியாலயத்திற்கும் அதிபர் கடமையினை பொறுப்பெடுக்குமாறு இந்த இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இடமாற்றம் செய்யப்படும் பாடசாலைகளில்
ஆசிரியர் சேவை சேர்ந்தவர்களே பதில் அதிபர் கடமைகள் புரிகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது .கல்முனை வலயக்கல்வி அலுவலகம் ஊடாக வெள்ளிக்கிழமை
கிழக்கு மாகான கல்வி அமைச்சின் செயலாளரினால் இந்த உத்தரவுக்கடிதம் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment