தென்கிழக்கு சமூகத்தினால் கலாநிதி சுக்ரி கௌரவிக்கப்பட்டார்
பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளரும், இஸ்லாமிய ஆய்வாளரும்,
இலங்கையின் தலைசிறந்த இஸ்லாமிய கல்விமானுமான கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி
அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு தென்கிழக்கு சமூகத்தினால் இன்று 2014.01.05ம்
திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 6.00 மணிக்கு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு
மண்டபத்தில் நடாத்தப் பட்டது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதியும் சிரேஷ்ட
விரிவுரையாளருமான கலாநிதி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் மௌலவி தலைமையில் இடம்
பெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்கு உலமாக்கள், பல்கலைக்கழக, கல்விக் கல்லூரி
விரிவுரையாளர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், புத்திஜீவிகள் உயர்
அதிகாரிகள் உட்பட முன்னாள் வர்த்தக வாணிப அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் என
பலர் கலந்து சிறப்பித்தனர்
இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவரும், பேராதனை பல்கலைக்கழக மெய்யியல்
துறை பேராசிரியருமான கலாநிதி.எம்.எஸ்.எம்.அனஸ், கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி
அவர்கள் பற்றிய விசேட உரை நிகழ்த்தினார்.
மேற்படி நிகழ்வில் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்கள் பற்றிய பல
சிறப்புரைகளும் நிகழ்த்தப் பட்டதோடு வாழ்த்துக்களும் ,நினைவு சின்னங்களும்
வழங்கி கௌரவிக்கப்பட்டன . நிகழ்வில் கலாநிதி அனஸ் அவர்களுக்கும் நினைவு
சின்னம் வழங்கப் பட்டது.
Comments
Post a Comment