Posts

கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது சற்று நேரத்திற்கு முன்னர் காடையர் கூட்டமொன்று தாக்குதல்

Image
கிரண்ட்பாஸ் – சுவர்ணசிட்டி வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது சற்று நேரத்திற்கு முன்னர் காடையர் கூட்டமொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. மஹ்ரிப் தொழுகை நேரத்திலேயே இந்த தாக்குதலை காடையர் கூட்டமொன்று மேற்கொண்டுள்ளது. அருகிலுள்ள சில முஸ்லிம் வீடுகளும் இதன்போது தாக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் பல இணையத்தளங்களுக்கும் அறிவித்துள்ளார். அத்துடன் பள்ளிவாசலுக்கு முன் வெளியே 100 க்கும் மேற்பட்ட காடையர்கள் கூடியிருப்பதாகவும், பள்ளிவாசல்கள் மீது மேற்கொண்ட தாக்குதலினால் பள்ளிவாசல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாகவும், அருகிலுள்ள முஸ்லிம் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானும் இணையத்தளங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

நோன்பு பெருநாளை முன்னிட்டுபட்டம் விடும் போட்டி

Image
இஷாரத்  சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டு கழகத்தின்  32வது ஆண்டு நிறைவை முன்னிட்டும்  புனித நோன்பு பெருநாளை முன்னிட்டும்  நடாத்தப்பட்ட  பட்டம் விடும் போட்டியும்  கலை கலாசார  நிகல்ச்களும் நேற்று வெள்ளிகிழமை (09) மாலை 4.30 மணிக்கு சாய்ந்தமருது பௌசி ஞாப கார்த்த  விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது . கழகத்தின் ஆயுத கால செயலாளர் எஸ்.முகம்மட் கான் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஒய்வு பெற்ற விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா ,ஸாஹிரா தேசிய பாட சாலை  ஆசிரிரியர் எம்.ஐ.எம்.அஸ்கர்  ஆகியோர் கலந்து  போட்டிகளை ஆரம்பித்து வைத்தனர் . இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பணப் பரிசு வழங்கப் பட்டது . கல்முனை பிற தேசத்தில் இவ்வாறானதொரு போட்டி நிகழ்வு நடை பெற்றது இதுவே முதல் தடவையாகும் . இப்போட்டியை பார்வை இட  பெருந்திரளான பொதுமக்கள்  விளையாட்டு திடலுக்கு வருகை தந்திருந்தனர் .

கல்முனை கிறீன் பீல்ட் வீட்டு திட்டத்தில்" ஆஷாத் பார்க்"திறப்பு விழா

Image
இஷாரத்  கல்முனை கிறீன் பீல்ட் வீட்டு திட்டத்தில் அமையப் பெற்றுள்ள " ஆஷாத் பார்க்"திறப்பு விழா வைபவம் வெள்ளிகிழமை (09) மாலை 5.30க்கு  நடை பெற்றது. சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்களுக்காக  அமைக்கப் பட்ட கிறீன் பீல்ட் வீட்டுதிட்டத்தின்  முகாமைத்துவக் குழுத்தலைவர்  ஏ.எம்.எம். கபூல் ஆசாத்தின்  வழி  காட்டலில்  நவீன வசதிகளை கொண்ட  சிறுவர் ,பெரியோர் என இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட  பொழுது போக்கு அம்சங்களை கொண்டதாக இப் பூங்கா அமையப் பெற்றுள்ளது.  இத்திறப்பு விழா வைபவத்தில்  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் ,முன்னாள் கிழக்கு மாகான சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ரஸாக் ,இப்பூங்காவின் ஸ்தாபகர்  தேசமானிய நாசிருள் ஹக் ஏ.எம்.எம். கபூல் ஆசாத்  ஆகியோர் கலந்து கொண்டு  சிறப்பித்தனர் .நோன்பு பெருநாளை கொண்டாடிய மக்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

ஈத் முபாரக்

Image

நோன்புப் பெருநாள் வெள்ளிக்கிழமைதான் என்பது பிறைக்குழு கூடி எடுத்த ஏகோபித்த முடிவாகும்

Image
-அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி கோரிக்கை- பிறையைக் கண்டதாக கூறுபவர்கள் நவீன ஊடகங்கள் மூலமாக ஏனைய பிரதேசங்களுக்கு பிறைபார்த்த தகவல்களை வழங்கி அவர்களைப் பிழையாக வழிநடாத்த முயற்சிக்க வேண்டாம். சமூகத்தின் ஒற்றுமைக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி  வேண்டுகோள் விடுத்தார்.   நோன்புப் பெருநாள்  வெள்ளிக்கிழமைதான் என்பது  பிறைக்குழு கூடி எடுத்த ஏகோபித்த முடிவாகும் எனவும் அவர் உறுதிபடக் கூறினார். கொழும்பு பெரிய பள்ளிவாயலில் நேற்று (7) மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் கூடிய பிறைக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நாட்டு முஸ்;லிம்களுக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன விசேட முஸ்லிம் சேவை கூடாக அறிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது: நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் பிறை கண்டதாக தெரிவிக்கப்பட்டன. ஆனால்- பிறை தொடர்பான சட்டதிட்டங்களுக்கமைய அவை நிரூபிக்கப் போதியதாக இருக்கவில்லை. இதனால்- இங்கு கூடிய உலமாக்கள் அனைவரும் நீண்ட ஆலோசனையின் பின்னர் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளோம். பிறையைக

கண்டி ஜனாதிபதி மாளிகையில் 'இப்தார்"

Image
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் -இப்தார்- நோன்பு துறக்கும் நிகழ்வு முதற் தடவையாக இந்த வருடம் கண்டியில் இடம்பெற்றது. இதற்கு முன்னர் இந்த நிகழ்வு அலரி மாளிகையிலேயே நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். மத்திய மாகாண முஸ்;லிம்களும் இந்த இப்தார் நிகழ்வில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பத்தை வழங்கும் முகமாகவே இம்முறை  இந்த நிகழ்வு நேற்று சனிக்கிழமை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது

க.பொ.த உயர்தர பரீட்சைகள் நாளை மறுதினம் ஆரம்பம்!

Image
க. பொ. த உயர்தர பரீட்சைகள் நாளை மறுதினம் 5 ஆம் திகதி ஆரம்ப மாகிறது. பரீட்சை நடைபெறுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்னதாக பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் வரவேண்டுமென பரீட்சை ஆணையாளர் கேட்டுக்கொண்டள்ளார். பரீட்சைகள் காலை 8.30 க்கு ஆரம்பமாகும். பகல் நேரம் 12.30 க்கும் இரண்டாவது கட்ட பரீட்சை ஆரம்பமாகும். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பிற்பகல் 2.00 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகும். நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள இப்பரீட்சைகளில் பழைய- புதிய பாடத்திட்டங்களின் படி 2 இலட்சத்து 92706 மாணவர்கள் தோற்றவுள்ளனர். புதிய பாடத் திட்டத்தின் படி 2 இலட்சத்து 35 318 பாடசாலை பரீட்சார்த்திகளும்- 45242 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர். பழைய பாடத்திட்டத்தின் படி 12146 தனிப்பட்ட பரீட்சார்த்திகளே தோற்றவுள்ளனர். நாடு முழுவதும் 2164 பரீட்சை நிலையங் களில் பரீட்சைகள் நடைபெற வுள்ளன. விசேட தேவையுடையவர்க ளுக்கென ரத்மலானையிலும்- தங்கல்லயிலும் பரீட்சைகள் நடத்தப்படும். பரீட்சை கடமைகளில் 16264 பேர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். உயர்தர பரீட்சைக்குரிய 5 பாடங்களுக்குமாக தமிழ் சிங்கள மொழிகளில் மொத்தம்

ஷவ்வால் மாதத் தலைப்பிறை பார்க்கும் மாநாடு

Image
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ள ஹிஜ்ரி 1434 ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மகாநாடு எதிர்வரும் 07 ஆம் திகதி புதன் மாலை மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும். உலமாக்கள், கதீப்மார்கள், ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், ஸாவியா, தக்கியா, மேமன் ஹனபி பள்ளி வாசல், ஷரீஆ கவுன்சில் ஆகிய வற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். 07.08.2013 புதன் மாலை மஃரிப் தொழுகை நேரமாகிய 06.29 மணி முதல் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறையை பார்க்குமாறும் தலைப்பிறை கண்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் உடனடியாக நேரிலோ அல்லது 0115234044, 2432110, 01122390783, 0777366099 ஆகிய தொலைபேசிக ளுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

செப்டெம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை தேர்தல்!

Image
வடக்கு- வட மேல் மற்றும் மத்திய ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் என்று தேர்தல் திணைக்களம் இன்று வியாழக்கிழமை நண்பகல் அறிவித்தது. மாகாண சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடைந்ததையடுத்தே   இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது

ஜனாதிபதியின் இப்தார் இம்முறை கண்டியில்

Image
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருடந்தோறும் ரமழான் மாதத்தில் நடத்தும் ‘இப்தார்’ வைபவம் இம்முறை கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஓகஸ்ட் 03 ஆம், 04 ஆம் திகதிகளில் இரு நாட்களுக்கும் நடைபெறும். இவ்வளவு காலமும் ஜனாதிபதி ‘இப்தார்’ வைபவத்தை கொழும்பில் அலரி மாளிகையிலேயே நடத்தி வந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஇன்று வேட்பு மனுதாக்கல்

Image
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய வேட்பு மனுக்களைஇன்று  திங்கட்கிழமை (யூலை 29) தாக்கல் செய்யவுள்ளதாக உட்கட்சி தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் யாழ் மாவட்டத்திற்கான வேட்புமனுக்களை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் தாக்கல் செய்யவுள்ளனர்.  கிளிநொச்சி மாவட்டத்துக்கான வேட்பு மனுவை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், கிளிநொச்சியில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுபவருமான வீரசிங்கம் ஆனந்தசங்கரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையிலான குழுவினர் தாக்கல் செய்யவுள்ளனர்.  அதுபோல மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்

Image
இவ்வருடம்  நடை பெற்ற  அகில இலங்கை  தமிழ் தினப் போட்டியில்  பாவோதல் முதலாம் பிரிவில்  கல்முனை கார்மேல் பற்றிமா  தேசிய பாடசாலை  மாணவி  செல்வி சுஷ்மிக்கா  முதலாமிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார் . இவர்  பாண்டிருப்பு சண்முகம் சரவண முத்து ,திருமதி காஞ்சனா சரவண முத்து ஆகியோரின் செல்வப் புதல்வியாவார் 

மாற்று மதங்களுடன் AGASS இப்தார் நிகழ்வு

Image
 சமயங்கள் ஊடாக ஒற்றுமையும் சமாதானமும் எனும் தலைப்பில் கடந்த  2013.07.21ம் திகதி மாலை மருதமுனை மக்கள் மண்டபத்தில் ஒன்று கூடல் நடை பெற்றது .   AGASS   அமைப்பின் தலைவர் Dr.S.S.ஜெமீல்  தலைமையில்  இடம்பெற்ற நிகழ்வின் போது  அயல் கிராம மாற்று மத சகோதரர்கள்,மும்மத தலைவர்கள் , ஊர் பிரமுகர்கள்   மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் என்போர் பங்குபற்றினர். இதன் போது மாற்று மத தலைவர்கள் சமயங்களின் ஊடாக  இனங்களிடையே  ஒற்றுமை ஏற்படுத்துவது தொடர்பான   கருத்துக்கள் அங்கு  பேசப்பட்டது  

பீடாதிபதியாக கலாநிதி சபீனா இம்தியாஸ்

Image
தென்கிழக்கு பல்கலை கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்துக்கான பீடாதிபதியாக கலாநிதி சபீனா இம்தியாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆளுகை காலத்தில் கலாநிதி சபீனா இம்தியாஸ் பீடாதிபதியாக கடமையாற்றி இருந்தார். பின்னர் அவரது ஆளுகை காலம் முடிவடைந்ததும் தற்காலிக பீடாதிபதியாக நசீர் அஹ்மட் உபவேந்தரால் நியமிக்கப்பட்டார். இன்று 24-07-2013 இடம்பெற்ற உபவேந்தர் தலைமையிலான பீடாதிபதி தெரிவின் போது கலாநிதி சபீனா இம்தியாஸ் மற்றும் கலாநிதி எச்.எம்.எம்.நளீர் ஆகியோர் போட்டியிட்டனர் இதன்போது இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் கலாநிதி சபீனா இம்தியாஸ் 12 வாக்குகளையும் கலாநிதி எச்.எம்.எம்.நளீர் 09 வாக்குகளையும் பெற்றனர். 03 மேலதிக வாக்குகளை பெற்ற கலாநிதி சபீனா இம்தியாஸ் நடப்பு ஆளுகை காலத்துக்கான பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தென்கிழக்கு பல்கலை கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்துக்கான முதல் இரண்டு ஆளுகை காலதத்திலும் செல்வி வினோதினி சந்தானமும் மூன்றாவது ஆளுகை காலதத்தில் நசீர் அஹ்மட் அவர்களும் அடுத்த நான்காவது ஆளுகை காலதத்தில் எ.எம்.றஸ்மியும் ஐந்தாவது ஆளுகை காலதத்திலும் நடப்பு ஆளுகை காலத்துக்கும் காலதத்த

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளன இப்தார் வைபவம்!

Image
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின்  வருடாந்த இப்தார் வைபவம் சனிக்கிழமை நிந்தவூர்  மாவட்ட தொழில் பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் அல்-ஹாஜ் மீரா எஸ்.இஸ்ஸதீன்  தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மௌலவி அல்ஹாபிழ் எம்.றிபாய் மார்க்க சொற்பொழிவாற்றினார்.

03ஏ சித்தி பெற்ற 25 தமிழ் ,முஸ்லிம் மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

Image
பல்கலை கழகங்களில் சரிவர  சட்டங்கள் நிறை வேற்றப் படுமானால் சில வேளைகளில் மாணவர்கள்  உரிமையை கூட இழக்க நேரிடும். அல்லது  பல்கலை கழகத்தில்  படிக்க  முடியாத நிலை ஏற்படும்  என தென் கிழக்கு பல்கலை கழக  உப வேந்தர்  கலாநிதி  எஸ்.எம்.எம்.இஸ்மாயில்  தெரிவித்தார்  கல்முனை தமிழ் சங்கமும்  மாணவர் மீட்பு பேரவையும்  இணைந்து கல்முனை கல்வி வலயத்தில்  2012ஆம்  ஆண்டு கல்வி பொது தராதர பரீட்ச்சையில்  03ஏ   சித்தி பெற்ற  25 தமிழ் ,முஸ்லிம் மாணவர்களை  பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  சனிக்கிழமை (20) கல்முனை நால்வர்  கோட்டம் தாமரை மண்டபத்தில்  தமிழ் சங்க தலைவர்  கலாநிதி பரதன் கந்தசாமி  தலைமையில் நடை பெற்றது. கிழக்கு பல்கலை கழக உப வேந்தர் கலாநிதி  கிட்ணன் கொபிந்தராஜா ,தென்கிழக்கு பல்கலை கழக  உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில்  ஆகியோர்  பிரதம அதிதிகளாகவும் ,கல்முனை தமிழ் பிரிவுக்கான பிரதேச செயலாளர்  கே.லவநாதன், கண்ணகி இலக்கிய கூடல் தலைவர் த.கோபால கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும்  கலந்து கொண்டனர்  கல்முனை தமிழ் சங்கத்தின்  ஆலோசகர் அருட் சகோதரர்  எஸ்.ஏ.ஐ.மத்தியு அவர்களின் ஆசியுரையுடன் ஆரம்

முஸ்லிம் அரசாங்க ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 07ம் திகதி சம்பளம்

Image
நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல முஸ்லிம் அரசாங்க ஊழியர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் 07ம் திகதி சம்பளம் வழங்கப்பட வேண்டுமென திறைசேரி சகல அரச திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளது. நோன்புப் பெருநாள் ஆகஸ்ட் மாதம் 09ம் திகதி கொண்டாடப்படவுள்ளதால் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதற்கான பணிப்புரையை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாகவும் இதற்கமைய தேவையான நிதி ஒதுக்கீடு சகல அமைச்சுக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக திறைசேரிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். தற்போது சகல அரசாங்க நிறுவனங்க ளிலும் சகல முஸ்லிம் உத்தியோகத்தர்க ளுக்கும் பெருநாள் முற்பணம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஜனாஸாவை உரிமை கோருங்கள்

Image
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் கிண்ணியா பிரதேசவாசி ஒருவரின் சடலம் வைக்கப்பட்டுள்ளது. கிண்ணியா மான்சோலையை  சேர்ந்த 68 வயதையுடைய அப்துல் காதர் என்பவர் கடந்த புதன்கிழமை இரவு அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சுகயீனம் முற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் நேற்று மாலை 5 மணியளவில் மரணமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகவும்  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. மேலும் இந்த சடலம் யாரும் உரிமை கோரப்படாத நிலையில் தற்போது கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலை பொலிஸ் பிரிவினர் தெரிவிக்கின்றனர். 

சிசுவை வயலில் வீசிய பெண் தடுப்புக் காவலில்..!!

Image
அம்பாறை மத்திய முகாம் பொலிஸ் பிரிவில் சிசுவொன்றை வயலில் வீசிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் தடுப்புக் காவலில் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மத்திய முகாம் பொலிஸ் பிரிவின் 11ஆம் இலக்க குடியேற்றக் கிராமத்தைச் சேர்ந்த இந்தப் பெண், கடந்த 13ஆம் திகதி இரவு சிசுவைப் பிரசவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாகக் கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார், உயிரிழந்த நிலையில் வயலில் இருந்து சிசுவின் உடலை நேற்று கண்டெடுத்ததுடன் அதன் தாயாரையும் கைது செய்துள்ளனர். திருமணமாகாத 30 வயதான பெண் ஒருவரே இரகசியமாக குழந்தையைப் பிரசவித்த பின்னர் வயலில் வீசியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தப் பெண் பொலிஸ் பாதுகாப்புடன் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் உயிரிழந்த சிசுவின் சடலமும் அதே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வவுனியா – அம்மிவைத்தான் பகுதியில் பிறந்து ஒரு நாள் நிரம்பிய சிசுவொன்றை நிலத்தில் புதைத்ததாகக் கூறப்படும் சம்பவமொன்று கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சிசுவின் தா

திருமணப் பந்தத்தில் இணைந்தார் மெத்தியூஸ்

Image
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் இன்று திருமணப் பந்தத்தில் இணைந்தார். மெத்தியூஸ் மற்றும் ஹேசானி சில்வா ஆகிய இருவருக்கும் கொள்ளுபிட்டி சென்.மேரிஸ் தேவாலயத்தில் வெகு சிறப்பாக திருமணம் இடம்பெற்றது. இவர்களது திருமணத்தின் சாட்சியாளர்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

பாடசாலைச் சிறார்களுக்கு இலவசமாக விட்டமின் வில்லைகள்!

Image
பாடசாலைச் சிறார்களின் அறிவு விருத்திக்காக சத்துள்ள விட்டமின் வில்லைகளை இலவசமாக வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இரும்புச் சத்துள்ள வில்லைகள், விட்டமின் சீ போன்ற வில்லைகளே இவ்வாறு  பாடசாலை சிறார்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி வில்லைகளை மாணவர்கள் தொடர்ச்சியாக 6மாத காலத்துக்கு  உட்கொண்டால் குறித்த மாணவர்களின் ஞாபகச்சக்தி, பாடங்களில் கரிசனை மற்றும் சுறுசுறுப்பு என்பன அதிகரிக்கும் என அமைச்சு நம்பிக்கை தெரிவிக்கிறது. பிரதேச வைத்திய அதிகாரி அலுவலகத்தினூடாக பிரதேச வைத்திய பரிசோதகர்களின் உதவியுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சு மேலும் தெரிவிக்றது.

பயணிகள் பஸ்ஸில்சட்ட விரோத சிகரட் பயணிகள் தெருவோரத்தில்

Image
கொழும்பில் இருந்து  பயணிகள் பஸ்ஸில் கல்முனைக்கு எடுத்து வரப்பட்ட ஒரு தொகை சட்ட விரோத  சிகரட்டுகள் கல்முனை பொலிசாரினால் கைப்பற்றப் பட்டுள்ளது. இன்று(17) அதிகாலை 5.00 மணிக்கு  கல்முனையில்  தேநீர்  கடை ஒன்றின் அருகே  பஸ்ஸில் கொண்டுவரப்பட்ட  பொதிகளை இறக்குகின்ற போதே  பொலிசாரினால் சுற்றி வளைக்கப் பட்டு  இந்த சட்ட விரோத சிகரட் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து  சம்மாந்துறைக்கு பயணிகளை ஏற்றி செல்லும் போதே  இந்த சம்பவம் கல்முனையில் இடம் பெற்றுள்ளது . சம்மாந்துறைக்கு செல்ல வேண்டிய பயணிகளை  கல்முனையில் இறக்கி விட்டு பொலிசார் பொலிஸ் நிலையத்துக்கு பஸ்ஸை எடுத்து சென்று விட்டனர். இதனால் கொழும்பில் இருந்து வந்த பயணிகள் செய் வதறியாது  தெருவோரத்தில் நின்றிருந்தனர். பஸ்சுடன் கைப்பற்றப்பட்ட  சட்ட விரோத சிகரட்டும் ,சாரதியும்  கல்முனை போலீசில் தடுத்து வைக்கப்பட்டு  விசாரிக்கப் படுகின்றனர்.