கண்டி ஜனாதிபதி மாளிகையில் 'இப்தார்"
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் -இப்தார்- நோன்பு துறக்கும் நிகழ்வு முதற் தடவையாக இந்த வருடம் கண்டியில் இடம்பெற்றது. இதற்கு முன்னர் இந்த நிகழ்வு அலரி மாளிகையிலேயே நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
மத்திய மாகாண முஸ்;லிம்களும் இந்த இப்தார் நிகழ்வில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பத்தை வழங்கும் முகமாகவே இம்முறை இந்த நிகழ்வு நேற்று சனிக்கிழமை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது
Comments
Post a Comment