நோன்பு பெருநாளை முன்னிட்டுபட்டம் விடும் போட்டி
இஷாரத்
சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டு கழகத்தின் 32வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் புனித நோன்பு பெருநாளை முன்னிட்டும் நடாத்தப்பட்ட பட்டம் விடும் போட்டியும் கலை கலாசார நிகல்ச்களும் நேற்று வெள்ளிகிழமை (09) மாலை 4.30 மணிக்கு சாய்ந்தமருது பௌசி ஞாப கார்த்த விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது .
கழகத்தின் ஆயுத கால செயலாளர் எஸ்.முகம்மட் கான் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஒய்வு பெற்ற விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா ,ஸாஹிரா தேசிய பாட சாலை ஆசிரிரியர் எம்.ஐ.எம்.அஸ்கர் ஆகியோர் கலந்து போட்டிகளை ஆரம்பித்து வைத்தனர் .
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பணப் பரிசு வழங்கப் பட்டது . கல்முனை பிற தேசத்தில் இவ்வாறானதொரு போட்டி நிகழ்வு நடை பெற்றது இதுவே முதல் தடவையாகும் . இப்போட்டியை பார்வை இட பெருந்திரளான பொதுமக்கள் விளையாட்டு திடலுக்கு வருகை தந்திருந்தனர் .
Comments
Post a Comment