Posts

சாய்ந்தமருது இளைஞர் சேவை நிலைய சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Image
தயட்ட கிருள தேசத்திற்கு மகுடம் மொழி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது இளைஞர் சேவை நிலையத்தில் சிங்கள, ஆங்கில மொழிக் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப் தலைமையில் றியாலுல் ஜன்னாஹ் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கௌரவ அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், விசேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா, சாய்ந்தமருது றியாலுல் ஜன்னாஹ் வித்தியாலய அதிபர் எம்.ஐ.சம்சுதீன், சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம்.ஐ.மதனி ஆகியோரும் கலந்து கொண்டனர். இதன்போது கணிணி மற்றும் ஹோட்டல் முகாமைத்துவம் போன்ற துறைகளில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த இளைஞர், யுவதிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இன மத பேதமின்றி ஒற்றுமையால் உயர்வடைவோம்!

Image
 – மட்டக்களைப்பில் ஜனாதிபதி- புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள மட்டக்களப்பு கல்லடி பாலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச  இன்று வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணியளவில் திறந்து வைத்தார். 289 மீற்றர் நீலமும் 14 மீற்றர் அகலமும் கொண்ட இந்த பாலத்தை நிர்மாணிக்க  1970 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர நிர்மல கொதலாவ-  கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ அப்துல் மஜீத்- இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொபுஹித்தோ ஹோபோஇஉட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பாலம் மட்டக்களப்பு மாவட்டத்தையும் அம்பாறை மாவட்டத்ததையும் இணைக்கின்றமை குறிப்பிடத்தக்கது. புதிய பாலத்தை திறந்து வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றும் போது- எல்லாவற்றையும் மறந்து அபிவிருத்திப் பாதையில் நாமனைவரும் இன மத பேதமின்றி கைகோர்த்து ஒற்றுமையாக நடைபோட வேண்டும். இலங்கை நாட்டில் மட்டக்களப்பு மாவட்டம் பல பின்னடைவுகளை சந்தித்த ஒரு மாவட்டமாகும். கடந்த 30 வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டது மாத்திரமல்லாமல் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய சுனாமி அனர்த்தத்தினாலும் கடுமையா

‘எமது உரிமைகளுக்காக வீதியில் களமிறங்கி போராடுவோம் அல்லாஹு அக்பர்’ கல்முனையில் துண்டுப்பிரசுரம்

Image

இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்; 6 முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவு!

Image
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸின் 22வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா முன்வைத்த பிரேரணை பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 25 வாக்குகளும் 13 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தியா இப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இந்தோனேசியா, கட்டார், பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், மாலைதீவு, ஆகிய ஆறு முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவும் அமெரிக்க பிரேரணைக்கு எதிராகவும் வாக்களித்துள்ளன. இதேவேளை லிபியா இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளதுடன்  கஸகஸ்தான் , மலேசியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

கல்முனைக்கு இன்று பிரதம நீதி அரசர் வருகை

Image
இன்று  புதன் கிழமை கல் முனைக்கு வருகை தந்த பிரதம நீதி அரசர் மொகான் பீரிஸ் மற்றும் நீதி சேவை ஆணைக்குழுவின் செயலாளர் சிசிர ரத்நாயக ஆகியோரை நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர்கள் மற்றும் கல்விமான்கள் வரவேற்பதையும் மேல் நீதிமன்ற நீதிபதி சுவர்ணராஜ் பிரதம நீதி அரசருக்கு நினைவு சின்னம் பொறிப்பதையும் கல்முனை பொலிசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வதையும் படங்களில் காணலாம் 

கல்முனை மாநகர சபைக்கு கெப் வாகனம்; அதாவுல்லா- சிராஸ் சந்திப்பின் பிரதிபலன்!

Image
கல்முனை மாநகர முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்எம்.அதாஉல்லா அவர்கள் கல்முனை மாநகர சபைக்கு கெப் வாகனம் ஒன்றினை வழங்குவதனையும் அதனை கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் அவர்கள் பெற்றுக் கொள்வதையும் படத்தில் காணலாம். இந்நிகழ்வில் அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கல்முனை மாநகர சபையின் தேவைகள் குறித்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் அதாவுல்லாவை முதல்வர் சிராஸ் தலைமையிலான குழுவினர் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்அரசியல்வாதிகள் அபிவிருத்திகளுக்காகவோ, சலுகைகளுக்காவோ முஸ்லிம் சமூகத்தை அடகு வைத்து விடக்கூடாது

Image
ஏ.எச்.எச்.எம். நபார்  அரசியல்வாதிகள் அபிவிருத்திகளுக்காகவோ, சலுகைகளுக்காவோ முஸ்லிம் சமூகத்தை அடகு வைத்து விடக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம். நபார் தெரிவித்தார். முஸ்லிம்களுக்கு எதிராக தீய சக்திகளால் ஏற்பட்டு வரும் அநியாயங்கள், அட்டூழியங்களுக்கு எதிராக குரல்கொடுக்க முன்வருமாறு முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  அவர் அதில் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,  இலங்கையில் எத்தனையோ விதமான முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தோற்றம் பெற்றிருக்கிறார்கள். எஸ்.டப்ளியு. ஆர். டி. பண்டாரநாயக்காவின் காலத்தில் டாக்டர் பதியுதீன் மஹ்மூத், ஜே.ஆர். ஜயவர்த்தனாவுடைய காலத்தில், ஏ.ஆர். மன்சூர், அதற்கு பிறகு ஆகோரமான யுத்த காலத்தில் முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் விமோசனத்தை பெற்றுத்தர காரணமான தலைவராக மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் தோற்றம் பெற்றிருக்கிறார்கள். இவ்வாறு இருந்த பல்வேறு அரசியல் தலைவர்களும் தமது இனத்திற்கு எதிரான விடயங்கள் வருகின்றபோது சுமுகமான முறையில் தீர்வுகளைக் கண்டிருக்கிறார்கள

சகோதரர்கள் ஐவருக்கு மனைவியாக வாழும் இந்தியப் பெண்

Image
இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூனில் உள்ள கிராமமொன்றில் பெண்ணொருவர் 5 கணவர்களுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அப்பெண்ணின் கணவர்கள் ஐவரும் சகோதர்களாவர். ராஜோ வேர்மா என்ற குறித்த பெண்ணின் வயது 21 ஆகும். அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. எனினும் குழந்தையின் தந்தை ஐவரில் யார் என்பது குறித்து அப்பெண்ணுக்கு தெரியாது. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். ராஜோ வேர்மாவை முதல்முறையாக திருமணம் செய்த கணவரின் பெயர் 21வயதான குட்டு ஆவார். அவரையே சட்டபூர்வமாக திருமணம் செய்துள்ளார்.  பின்னர் அவர் தனது கிராமத்து வழக்கப்படி கணவரின் சகோதர்களான பாஜு(32), சாந்த் ராம்(28), கோபால்(26), தினேஷ் (19) ஆகியோருடன் வாழ்ந்து வருகின்றார். தான் ஒவ்வொருவருடனும் உடலுறவு கொள்வதாக தெரிவிக்கும் ராஜா வேர்மா அனைவரையும் ஒரேமாதிரி கவனித்து வருவதாகவும் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் சகோதரர்களும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருப்பதாகவும், தனது தாயும் 3 கணவர்களுடன் வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் இன்று முனாபிக் காங்கிரஸாக மாறியிருப்பது ஆபத்தானது.

Image
-faji- இந்த அரசாங்கம் உருவாகிய ஆரம்பத்திலேயே முஸ்லிம்களின் வர்த்தக துறையில் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது.       பகிரங்கமான வன்முறைக்கு எந்த விதமான தடையையும் அரசாங்கம் விதிக்கவில்லை. இன்று அரசாங்கத்துக்கு எந்த அடிப்படையில் முட்டுக்கொடுக்கின்றார்கள் என்றால் சமூகம் சார்ந்த எதுவும் இல்லை. அஸ்ரபின் மறைவுக்கு பின் முஸ்லிம் அரசியல் வாதிகள் எதையும் சாதிக்கவில்லை. குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் உரிமை சம்மந்தமாக எதையும் வெற்றிகொள்ள வில்லை அதன் உயர்நிலை பீடம் வர்த்தக நிலையமாகவே இதுவரை காணப்படுகிறது. ஒருதலைபட்சமாக சுய நலத்திட்காய் ஓட்டுக்குளு போன்று செயற்படுவதை மறுக்க முடியாது. குறிப்பாக முஸ்லிம்களின் சமயத்தை கருவியாக பயன்படுத்தி மாகாண சபையில் அமர்ந்து கொண்டவர்களால் இவ்வாறு வலிமையற்ற எதிரொலியை கடும்போக்கு வாதிகள் சாதகமாக கொண்டுவிட்டார்கள். இப்படியான கேவலமான அரசியல் பிழைப்பை சமூகம் கண்டிகாமை அதைவிட கேவலமாக இருக்கிறது. முஸ்லிம்களின் பிரச்சினைக்கும் அதற்கான தீர்வுக்கும் இடையே பாரிய இடைவெளி இருக்கிறது. அரசியல் ரீதியாக மட்டுமன்றி ஒற்றுமை ரீதியாகவும் ஆண்மீகரீதியாகவும் பாரிய சிதைவு தெரிகிற

முஸ்லிம்களுக்கு எதிரான நெருக்கடிகளை நிறுத்தக் கோரி 25ஆம் திகதி நாடு முழுவதும் ஹர்த்தால்!

Image
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இனவாத நெருக்கடிகளை நிறுத்தக் கோரி எதிர்வரும் 25ஆம் திகதி நாடு முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு இந்த அழைப்பை  விடுத்திருக்கிறது.

அபாயாவை அணியக் கூடாது என்று சொல்பவர்களுக்கு என்ன அருகதையிருக்கிறது?

Image
சல்மா அமீர் ஹம்ஸா  சல்மா அமீர் ஹம்ஸா   சர்வதேச பெண்கள் தினம் நாடெங்கிலும் நினைவுபடுத்தப்பட்டு வந்தாலும், பெண்களுக்கெதிரான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது என்பதையிட்டுக் கவலையடைகிறேன். இஸ்லாமியப் பெண்கள் எமது நாட்டில் சுதந்திரமாக, அவர்களின் கலாசார ஆடைகளுடன் பயணிக்க முடியாத அச்சம் நிறைந்த சூழலினை அண்மைக்கால சம்பவங்களும், இனவாத உணர்வலைகளைத் தூண்டுகின்ற கோசங்களும் நாளுக்கு நாள் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறது. என்ன நிலை வந்தபோதிலும் அபாயாவைக் களையமாட்டோம், அணிதிரண்டு போராடுவோம் என நகர சபை உறுப்பினர் ஹாஜியானி. ஸல்மா அமீர் ஹம்ஸா தெரிவித்தார்.  மாதர் சங்கங்களின் மகளிர் தின நிகழ்வு காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலயத்தில் மாதர் சங்கங்களின் இணைத் தலைவிகளின் தலைமையில் மாதர்களின் பங்குபற்றுதலுடன் நிகழ்ந்தது. இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு சல்மா அமீர்ஹம்ஸா மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,  அண்மைக்காலமாக இஸ்லாமியப் பெண்கள் தலைநிமிர்ந்து தனிச் சிறப்புடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இந்நிலையினை அடைவதற்கு பல சோதனைகளையும், வேதனைகளையும் துச்சமாக நினைத்து வ

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியில் மும்மொழிகளையும் பயன்படுத்துக!

Image
அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி உத்தரவு! தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சியின் போது மும்மொழிகளையும் கட்டாயம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  உத்தரவிட்டுள்ளார். கண்காட்சி பூமியில் அமைக்கப்படும் சகல காட்சி கூடங்கள், பதாதைகள், கட்அவுட்கள் பனர்களில் விசேடமாக அரச கரும மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் கட்டாயம் பொறிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் தெரிவித்தார். 2013 ஆம் ஆண்டுக்கான தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சி எதிர்வரும் 23 ஆம் திகதி அம்பாறை ஹாடி உயர் தொழில் நுட்பவியல் நிறுவனம் மற்றும் அதனை அண்டியுள்ள சுமார் 120 ஏக்கர் நிலப்பரப்பில் இடம்பெறவுள்ளது. இந்த கண்காட்சி ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற சகல ஆலோசனைக் கூட்டங்களின் போதும் அரச கரும மொழிகளின் பயன்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி உத்தரவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை மும்மொழி அமுலாக்கலை கண்காட்சியின் போது கட்டாயம் நடைமுறைப்படுத்துமாறு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு விசேட சுற்று

தமிழர்களுக்கு ஐ.நா.வில் ஒரு தீர்வு கிடைக்கும் என்றால் அது நீண்ட நாட்கள் செல்லும்

Image
அரியநேத்திரன் MP ஜெனீவாவில் அமெரிக்க அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கா விட்டாலும் அவை நிறைவேற்றத் தேவையானவற்றை அமெரிக்க செய்யும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.  தமிழ் நாட்டில் இருந்து ஏனைய மாநிலங்களுக்கு பரவி வரும் மாணவர்களின் போராட்டம் காரணமாக இந்தியா இலங்கைக்கு சார்பாக செயற்படமுடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  ஜெனீவாவுக்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழுவில் சென்று வந்தது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு வழங்காவிட்டாலும் அமெரிக்காவின் தீர்மானம் வெற்றிபெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  எவ்வாறாயினும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழல் ஒருபோதும் இந்தியாவை இலங்கைக்கு சார்பாக வாக்களிக்கசெய்யும் என்று தான் நம்பவில்லையெனவும் தெரிவித்தார்.  உலக நாடுகள் இந்த தீர்மானம் தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதை தாங்கள்

ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு!

Image
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக ‘ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையம்’ நாளை காலை சுப வேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்  திறந்து வைக்கப்படுகிறது. அம்பாந்தோட்டை மத்தளவில் அமைந்துள்ள இவ்விமான நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைப்பதுடன் இலங்கை விமானி ஒருவரினால் செலுத்தப்படும் எயார் அரேபியா விமான சேவைக்குச் சொந்தமான ஜீ 9508 ரக பயணிகள் விமானம் முதல் விமானமாக தரையிறங் குகிறது. திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்த விமானத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் வருகை தரவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸக்குச் சொந்தமான விமானமும் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி இவ்விமான நிலையத்துக்கு அடிக்கல் நடப்பட்டது. இவ் விமான நிலைய அமைப்புப் பணிகள்  2010ஆம் ஆண்டு முதல் சைனா ஹாபர் பொறியியல் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கட்டுநாயக்க சர்வதேச விமானநிலை யத்தையும் விட 3500 மீற்றர் நீளமும் 75 மீற்றர் அகலமும் கூடுதலாக

அம்பாரைமாவட்டஉள்ளூராட்சி சபைகளுக்கு வாகனங்களை கையளிக்கும் நிகழ்வு

Image
அம்பாரைமாவட்டத்தில் 7வது முறையாக நடைபெறும் தயட்டகிருள வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டத்தில் வாகனவசதிகள் இன்றி மிக நீண்ட காலமாக சிரமத்திற்குள்ளான உள்ளூராட்சி சபைகளுக்கு வாகனங்களை கையளிக்கும் நிகழ்வு இலங்கைஉள்ளூர் ஆளுகைநிறுவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசியகாங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சிமற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஅவர்கள் கலந்து கொண்டு வாகனங்களை வழங்கிவைத்தார். வாகனங்கள் வழங்கப்பட்டசபைகள் வருமாறு; 01. தெஹியத்தக்கண்டியபிரதேச சபை 02. மகாஓயபிரதேச சபை 03. உஹணபிரதேச சபை 04. தமணபிரதேச சபை 05. பொத்துவில்பிரதேச சபை 06. நிந்தவூர்பிரதேச சபை 07. அக்கரைப்பற்றுமாநகர சபை 08. கல்முனைமாநகர சபை

தமிழகத்தில் பிக்குமீது தாக்குதல்..

Image
தமிழகம் தஞ்சைப் பெருங்கோயிலுக்குச் இலங்கை பௌத்த பிக்கு ஒருவர்மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடமாநிலங்களைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வூ மாணவர்கள் 19 பேர் தஞ்சாவூ+ர் பெரியகோவிலுக்கு ஆய்வூக்காக சென்றுள்ளனர். அவர்களில் இலங்கையைச் சேர்ந்த சிங்கள இன பௌத்த பிக்கு என தெரியவந்ததை தொடர்ந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்றுகாலை நாம் தமிழர் கட்சிஇ தமிழ் தேசப் பொதுவூடமைக் கட்சிஇ மதிமுகவினர் உள்ளிட்ட தமிழ் அமைப்பினர்இ பௌத்த பிக்குமீது தாக்குதல் நடத்தியூள்ளனர். அவர்களைத் தடுத்த மற்றவர்கள்இ அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுஇ தொல்லியல்துறை அலுவலகத்தில் தங்க வைத்துள்ளனர். பின்னர் தமிழ் அமைப்புகள் இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தியூள்ளனர். இதனையடுத்து இவர்கள் கைதாகியூள்ளனர்.

கல்முனை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை வெளியேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

Image
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை இடமாற்றுமாறு கோரி இன்று சனிக்கிழமை காலை வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. கல்முனை தமிழர் சமூக சீர்த்திருத்த அமைப்பு மற்றும் தமிழர் இளைஞர் அணி என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில்  இரண்டு வருடங்களாக கடமையாற்றிக் கொண்டிருக்கும் குறித்த முஸ்லிம் வைத்திய அத்தியட்சகர் இன ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தமிழ் வைத்தியர்களை பதிலீடுகள் இல்லாமல் இடமாற்றம் செய்வதாகவும் சம்பள ஏற்றத்திற்காக செல்லும் தமிழ் உத்தியோகத்தர்களை தேவாரம் பாடுமாறு வற்புறுத்துவதாகவும் சயரோக பகுதியில் கிருமி நீக்கம் செய்யும் உபகரணத்தை முறையற்ற விதத்தில் சம்மாந்துறை வைத்தியசாலை சயரோக பிரிவிற்கு மாற்றியதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர். ஆகையினால் இவ்வைத்தியசாலையிலிருந்து இவர் வெளியேற்றப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர். கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிரான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அவ்விடத்திற்கு விஜயம் செய்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவ

கல்முனை வை.எம.சீ.ஏ வர்த்தக நிலையத் தொகுதிதிறப்பு

Image
  கடந்த 2011.07.04 ஆந்திகதி மின் ஒழுக்கு காரணமாக எரிந்து முற்றாக சேதமான கல்முனை வை.எம.சீ.ஏ வர்த்தக நிலையத்  தொகுதி புதிதாக நிர்மாணிக்கப்பட்டு  இன்று சனிக்கிழமை திறந்து வைக்கப் படவூள்ளது. கல்முனை வை.எம.சீ.ஏ  தலைவர் கே.சி.ஜீவகடாசம் தலைமையில் இடம் பெறும் வைபவத்தில்  தேசிய கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின்  இலங்கைத் தலைவர் பெலிஸியன் தயாளராஜ் பிரான்ஸிஸ் பிரதம அதிதியாக கலந்து புதிய வர்த்தக நிலையத் தொகுதியை திறந்து வைக்கவுள்ளார் .  

பாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிடுவதற்கு தடை

Image
பாடசாலை மாணவர்களிடமிருந்து எந்தக் காரணத்துக்காகவும் பணம் அறவிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவிக்கிறது. அத்துடன் பாடசாலைக்கான சட்ட ரீதியான கட்டணம் செலுத்தாத மாணவர்களை எந்தவிதத்திலும் உடல், உள ரீதியான அழுத்தங்களுக்கு உட்படுத்தக்கூடாது என்றும் கல்வி அமைச்சு விசேட சுற்று நிருபம் மூலம் அறிவித்துள்ளது. இதற்கான சுற்றுநிருபத்தை கல்வி அமைச்சு நேற்று வெளியிட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.கோட்டாபய ஜயரட்ன அறிவித்துள்ளார். சகல மாகாண கல்விச் செயலாளர்களுக்கும் மகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்தச் சுற்றுநிருபம் நேற்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அனுமதி இல்லாத விடயங்களுக்காக நிதி சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும், தேசிய மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு சுற்றுநிருபம் அனுப்பப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய, நேற்று இந்த சுற்றுநிருபத்தை கல்வி அமைச்சின் செயலாளர் அனுப்பிவைத்துள்ளார். 1975ஆம் ஆண்டின் 57/75ஆம் இலக்க வசதிகள் சேவைக் கட்டண சுற்றுநிருபம், 1982.03.30ஆம் திகதிய 82/2ஆம் இலக்க பாடசாலை அபிவிருத்தி சங்க

பள்ளிவாசல்களின் அபிவிருத்திற்கு நிதி

Image
தயட்ட கிருள தேசத்துக்கு மகுடம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திட்குட்பட்ட பள்ளிவாசல்களின் அபிவிருத்திற்கு நிதி வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.வஸீர், ஏ.எம்.நிஸார்டீன், காரைதீவு பிரதேச சபை எதிர்க் கட்சித் தலைவர் ஏ.பாயிஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், உலமாக்கள், புத்திஜீவிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள என பலர் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்வில் பள்ளிவாசல் அபிவிருத்தி நிதிக்கான உத்தியோக பூர்வ கடிதங்களை அதிதிகள் வழங்கி வைத்தனர். இவ்வாறு பத்து பள்ளிவாசல்களுக்கு 38 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதன்போது வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி சாவோஸ் நினை

மர்ஹ¥ம் எச். எல். ஜமால்தீன் ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி:

Image
முதல் போட்டியில் காத்தான்குடி பதுரிய்யா, கல்முனை பிர்லியன்ட் மோதல் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படும் மர்ஹ¥ம் எச். எல். ஜமால்தீன் எஸ்.பி. ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை பி.ப. 04.00 மணிக்கு மருதமுனை மஷ¥ர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்துவைக்கப் படவிருக்கிறது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சுமார் பதினொரு கழகங்கள் பங்குகொள்ளும் மேற்படி சுற்றுப் போட்டியின் முதலாவது போட்டியில் காத்தான்குடி பதுரிய்யா விளையாட்டுக் கழகமும், கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகமும் பங்குபற்றவிருக்கின்றன. ஆரம்பவைபவத்தின் பொழுது முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. எம். ஏ. றஸாக் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவிருக்கின்றார்.

சமுதாயத்தின் நலன் கருதி பிரிவுகளையும் பிளவுகளையும் களைந்து ஒற்றுமைப்பட வேண்டும்

Image
ஹரீஸ் எம் .பி  இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய சூழ்ச்சிகளும் சதி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இக்கட்டான தருணத்தில் அனைத்து பேதங்களையும் மறந்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் சிவில் சமூக பிரதிநிதிகளும் உலமா சபையினரும் பொது மக்களும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம. ஹரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் புதன்கிழமை (13) நடைபெற்ற வைபவம் ஒன்றில் பிரதம் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ. பசீர், ஏ. நிசார்டீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். அங்கு அவர் மேலும் கூறியதாவது; “எமது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனா அமைப்பினர் மேற்கொண்டு வருகின்ற மிக மோசமான நடவடிக்கைகளினால் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை சீர்குலைவதற்கு வழி வகுத்திருப்பதுடன் அப்பாவி முஸ்லிம்களை வெகுவாக பீதியடையவும் செய்துள்ளன. சிங்கள

இவர்களின் மௌனத்திற்கு காரணம் என்ன..?

Image
இலங்கையில் பொதுபல சேனா என்ற பௌத்த இனவாத அமைப்பு பற்றவைத்த ஹலால் தீ இன்று இலங்கையில் சிங்களவர்கள் முஸ்லிம்களை தோற்கடித்துவிட்டார்கள் என்ற எண்ணத்தை பரவலாக ஏற்படுத்தியுள்ளது.  இலங்கையில் இருந்து ஹலால் துரத்தப்பட வேண்டும் என பொதுபல சேனா வலியுறுத்தியது. அதற்கு அமைய சிங்கள பேரினவாத கட்சிகள் சிலவற்றின் அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் ஹலால் ஒழிக்கப்பட்டுள்ளது.  இந்த ஹலால் மற்றும் பொதுபல சேனா விடயத்தில் எதிர்கட்சி முஸ்லிம் தலைவர்கள் தொடர்ச்சியான குரல்களை எழுப்பி வந்துள்ளனர்.  ஆனால் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு, பிரதி அமைச்சு பதவிகளைப் பெற்றுள்ள முஸ்லிம் தலைவர்கள் இன்னும் மௌனம் காத்து வருகின்றனர்.  இதற்கு என்ன காரணம்? இது இராஜதந்திர மௌனமா? அல்லது பயந்த மௌனமா? அல்லது சுயநல மௌனமா? உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...!