இவர்களின் மௌனத்திற்கு காரணம் என்ன..?

இலங்கையில் பொதுபல சேனா என்ற பௌத்த இனவாத அமைப்பு பற்றவைத்த ஹலால் தீ இன்று இலங்கையில் சிங்களவர்கள் முஸ்லிம்களை தோற்கடித்துவிட்டார்கள் என்ற எண்ணத்தை பரவலாக ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கையில் இருந்து ஹலால் துரத்தப்பட வேண்டும் என பொதுபல சேனா வலியுறுத்தியது. அதற்கு அமைய சிங்கள பேரினவாத கட்சிகள் சிலவற்றின் அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் ஹலால் ஒழிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஹலால் மற்றும் பொதுபல சேனா விடயத்தில் எதிர்கட்சி முஸ்லிம் தலைவர்கள் தொடர்ச்சியான குரல்களை எழுப்பி வந்துள்ளனர். 

ஆனால் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு, பிரதி அமைச்சு பதவிகளைப் பெற்றுள்ள முஸ்லிம் தலைவர்கள் இன்னும் மௌனம் காத்து வருகின்றனர். 

இதற்கு என்ன காரணம்? இது இராஜதந்திர மௌனமா? அல்லது பயந்த மௌனமா? அல்லது சுயநல மௌனமா? உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...!

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்