கல்முனை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை வெளியேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை இடமாற்றுமாறு கோரி இன்று சனிக்கிழமை காலை வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
கல்முனை தமிழர் சமூக சீர்த்திருத்த அமைப்பு மற்றும் தமிழர் இளைஞர் அணி என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில்
இரண்டு வருடங்களாக கடமையாற்றிக் கொண்டிருக்கும் குறித்த முஸ்லிம் வைத்திய அத்தியட்சகர் இன ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தமிழ் வைத்தியர்களை பதிலீடுகள் இல்லாமல் இடமாற்றம் செய்வதாகவும் சம்பள ஏற்றத்திற்காக செல்லும் தமிழ் உத்தியோகத்தர்களை தேவாரம் பாடுமாறு வற்புறுத்துவதாகவும் சயரோக பகுதியில் கிருமி நீக்கம் செய்யும் உபகரணத்தை முறையற்ற விதத்தில் சம்மாந்துறை வைத்தியசாலை சயரோக பிரிவிற்கு மாற்றியதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.
ஆகையினால் இவ்வைத்தியசாலையிலிருந்து இவர் வெளியேற்றப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிரான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அவ்விடத்திற்கு விஜயம் செய்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவிடம் கையளிக்கப்பட்டது.
பிந்திய செய்தி
டாக்டர் ஜாபீர் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலைக்கு அத்தியட்சகராக நியமிக்கப் பட்டதிலிருந்து இனவாத்தைக் கக்கும் சில தமிழ் இனவாதிகள் முஸ்லிமானவர் ஒருவர் கல்முனை வடக்கு வைத்திய சாலையில் அத்தியட்சகராக இருக்கக் கூடாது என்பதற்காக பல ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வருகின்றனர்.
வேலையற்ற வீதி சுற்றிகள் சிலரை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களே வைத்திய சாலையில் உங்களால் சொல்லப்படும் குற்றச் சாட்டுக்களை நிருபிக்க வைத்திய சாலையில் கடமை புரியும் ஒரு ஊழியரையாவது ஆர்ப்பாட்டத்தில் நிறுத்தி இருக்கலாமே என வைத்திய சலையில் கடமை புரியும் தாதி ஒருவர் தெரிவித்துள்ளார்
Comments
Post a Comment