மர்ஹ¥ம் எச். எல். ஜமால்தீன் ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி:
முதல் போட்டியில் காத்தான்குடி பதுரிய்யா, கல்முனை பிர்லியன்ட் மோதல்
அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படும் மர்ஹ¥ம் எச். எல். ஜமால்தீன் எஸ்.பி. ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை பி.ப. 04.00 மணிக்கு மருதமுனை மஷ¥ர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்துவைக்கப் படவிருக்கிறது.
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சுமார் பதினொரு கழகங்கள் பங்குகொள்ளும் மேற்படி சுற்றுப் போட்டியின் முதலாவது போட்டியில் காத்தான்குடி பதுரிய்யா விளையாட்டுக் கழகமும், கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகமும் பங்குபற்றவிருக்கின்றன. ஆரம்பவைபவத்தின் பொழுது முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. எம். ஏ. றஸாக் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவிருக்கின்றார்.
Comments
Post a Comment