இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்; 6 முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவு!
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸின் 22வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா முன்வைத்த பிரேரணை பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு ஆதரவாக 25 வாக்குகளும் 13 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தியா இப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
இந்தோனேசியா, கட்டார், பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், மாலைதீவு, ஆகிய ஆறு முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவும் அமெரிக்க பிரேரணைக்கு எதிராகவும் வாக்களித்துள்ளன.
இதேவேளை லிபியா இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளதுடன் கஸகஸ்தான் , மலேசியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment