முஸ்லிம் காங்கிரஸ் இன்று முனாபிக் காங்கிரஸாக மாறியிருப்பது ஆபத்தானது.
-faji-இந்த அரசாங்கம் உருவாகிய ஆரம்பத்திலேயே முஸ்லிம்களின் வர்த்தக துறையில் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. பகிரங்கமான வன்முறைக்கு எந்த விதமான தடையையும் அரசாங்கம் விதிக்கவில்லை. இன்று அரசாங்கத்துக்கு எந்த அடிப்படையில் முட்டுக்கொடுக்கின்றார்கள் என்றால் சமூகம் சார்ந்த எதுவும் இல்லை.
அஸ்ரபின் மறைவுக்கு பின் முஸ்லிம் அரசியல் வாதிகள் எதையும் சாதிக்கவில்லை. குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் உரிமை சம்மந்தமாக எதையும் வெற்றிகொள்ள வில்லை அதன் உயர்நிலை பீடம் வர்த்தக நிலையமாகவே இதுவரை காணப்படுகிறது.
ஒருதலைபட்சமாக சுய நலத்திட்காய் ஓட்டுக்குளு போன்று செயற்படுவதை மறுக்க முடியாது. குறிப்பாக முஸ்லிம்களின் சமயத்தை கருவியாக பயன்படுத்தி மாகாண சபையில் அமர்ந்து கொண்டவர்களால் இவ்வாறு வலிமையற்ற எதிரொலியை கடும்போக்கு வாதிகள் சாதகமாக கொண்டுவிட்டார்கள்.
இப்படியான கேவலமான அரசியல் பிழைப்பை சமூகம் கண்டிகாமை அதைவிட கேவலமாக இருக்கிறது.
முஸ்லிம்களின் பிரச்சினைக்கும் அதற்கான தீர்வுக்கும் இடையே பாரிய இடைவெளி இருக்கிறது. அரசியல் ரீதியாக மட்டுமன்றி ஒற்றுமை ரீதியாகவும் ஆண்மீகரீதியாகவும் பாரிய சிதைவு தெரிகிறது.
முதுகெலும்பில்லாத தலைவர்களால் கூறப்படும்”ராஜ தந்திர நகர்வு” என்ற வேசத்தை நம்புவார்களாயின் அதைவிட முட்டாள்தனம் எதுவும் இல்லை.ஒரு போதும் துணிவான கருத்தை அவர்களால் கூறமுடியாது. காரணம் அந்த கட்சி விலை போகிவிட்டது.
மு.கா இன்னும் இரண்டு பிரதி அமைச்சுக்கு காத்துக்கிடக்கிறது. இவ்வாறன மொத்த வியாபாரத்தின் மூலம் இணைப்பு செயலாளர் P.R.O, மற்றும் சலுகைகள் jp பதவிகள் மூலம் சமூகத்தின் உரிமை சில்லறை வியாபாரமாகி விட்டது.
குறிப்பாக இன்றைய தலைவர் பொருத்தமானவரா என்ற கேள்வியை அதன் போராளிகள் என்று சொல்பவர்கள் எழுப்பவேண்டும்.உண்மையாகவே மறைந்த தலைவரையும் இந்த கட்சியை நேசிப்பவர்களும் அதன் தலைவர் பற்றியும் தவிசாளர் பற்றியும் சிந்தித்து அந்த கட்சியை காப்பாற்ற வேண்டும்.
இல்லையென்றால் முஸ்லிம் சமூகத்தின் இருப்பை உறுதிசெய்ய அந்த கட்சியை நிராகரிக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் இன்று முனாபிக் காங்கிரஸாக மாறியிருப்பது ஆபத்தானது.
உரிமைக்காக வலிந்து அரசியல் செய்யும் மன வளர்ச்சியை தமிழ் சகோதரர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழர்களின் பிரச்சினை சர்வதேசமயப்படுதப்பட்டுள்ளமை அவர்களுக்கு கிடைத்துள்ள முன்னேற்றமாகும்
Comments
Post a Comment