பள்ளிவாசல்களின் அபிவிருத்திற்கு நிதி
தயட்ட கிருள தேசத்துக்கு மகுடம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திட்குட்பட்ட பள்ளிவாசல்களின் அபிவிருத்திற்கு நிதி வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.வஸீர், ஏ.எம்.நிஸார்டீன், காரைதீவு பிரதேச சபை எதிர்க் கட்சித் தலைவர் ஏ.பாயிஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், உலமாக்கள், புத்திஜீவிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பள்ளிவாசல் அபிவிருத்தி நிதிக்கான உத்தியோக பூர்வ கடிதங்களை அதிதிகள் வழங்கி வைத்தனர். இவ்வாறு பத்து பள்ளிவாசல்களுக்கு 38 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி சாவோஸ் நினைவு கூறப்பட்டு இரங்கல் உரையும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸினால் நிகழ்த்தப்பட்டது.
Comments
Post a Comment