சகோதரர்கள் ஐவருக்கு மனைவியாக வாழும் இந்தியப் பெண்
இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூனில் உள்ள கிராமமொன்றில் பெண்ணொருவர் 5 கணவர்களுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அப்பெண்ணின் கணவர்கள் ஐவரும் சகோதர்களாவர். ராஜோ வேர்மா என்ற குறித்த பெண்ணின் வயது 21 ஆகும். அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. எனினும் குழந்தையின் தந்தை ஐவரில் யார் என்பது குறித்து அப்பெண்ணுக்கு தெரியாது. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். ராஜோ வேர்மாவை முதல்முறையாக திருமணம் செய்த கணவரின் பெயர் 21வயதான குட்டு ஆவார். அவரையே சட்டபூர்வமாக திருமணம் செய்துள்ளார்.
பின்னர் அவர் தனது கிராமத்து வழக்கப்படி கணவரின் சகோதர்களான பாஜு(32), சாந்த் ராம்(28), கோபால்(26), தினேஷ் (19) ஆகியோருடன் வாழ்ந்து வருகின்றார். தான் ஒவ்வொருவருடனும் உடலுறவு கொள்வதாக தெரிவிக்கும் ராஜா வேர்மா அனைவரையும் ஒரேமாதிரி கவனித்து வருவதாகவும் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் சகோதரர்களும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருப்பதாகவும், தனது தாயும் 3 கணவர்களுடன் வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Comments
Post a Comment