அபாயாவை அணியக் கூடாது என்று சொல்பவர்களுக்கு என்ன அருகதையிருக்கிறது?

சல்மா அமீர் ஹம்ஸா 
சல்மா அமீர் ஹம்ஸா 
சர்வதேச பெண்கள் தினம் நாடெங்கிலும் நினைவுபடுத்தப்பட்டு வந்தாலும், பெண்களுக்கெதிரான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது என்பதையிட்டுக் கவலையடைகிறேன். இஸ்லாமியப் பெண்கள் எமது நாட்டில் சுதந்திரமாக, அவர்களின் கலாசார ஆடைகளுடன் பயணிக்க முடியாத அச்சம் நிறைந்த சூழலினை அண்மைக்கால சம்பவங்களும், இனவாத உணர்வலைகளைத் தூண்டுகின்ற கோசங்களும் நாளுக்கு நாள் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறது. என்ன நிலை வந்தபோதிலும் அபாயாவைக் களையமாட்டோம், அணிதிரண்டு போராடுவோம் என நகர சபை உறுப்பினர் ஹாஜியானி. ஸல்மா அமீர் ஹம்ஸா தெரிவித்தார். 

மாதர் சங்கங்களின் மகளிர் தின நிகழ்வு காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலயத்தில் மாதர் சங்கங்களின் இணைத் தலைவிகளின் தலைமையில் மாதர்களின் பங்குபற்றுதலுடன் நிகழ்ந்தது. இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு சல்மா அமீர்ஹம்ஸா மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

அண்மைக்காலமாக இஸ்லாமியப் பெண்கள் தலைநிமிர்ந்து தனிச் சிறப்புடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இந்நிலையினை அடைவதற்கு பல சோதனைகளையும், வேதனைகளையும் துச்சமாக நினைத்து வெளிச்சத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் போது, இவற்றுக்கு முட்டுக் கட்டையாக சில இனவாதச் சிறு குழுக்கள் அவர்களின் கால்புணர்ச்சியின் காரணமாக, எமது சமயப் பெண்களின் அடிப்படை ஆடைகளின் அர்த்தம் புரியாமல் அதனை மட்டுப்படுத்த அறிக்கைள் இட்டுக் கொண்டிருக்கின்றனர். 

உலக நாகரிகத்தின் உன்னதமான ஆடை என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட “அபாயா”வினை அணியக் கூடாது என்று சொல்வதற்கு இவர்களுக்கு என்ன அருகதையிருக்கிறது? உண்மையான முஸ்லிம் இஸ்லாத்திற்காக, அதன் நாகரிகத்தை காப்பாற்றுவதற்காக உயிரையும் கொடுத்த வரலாற்றுச் சொந்தக்காரர்களின் பரம்பரையில் வந்த நாம் இச் செய்தியைச் கூறும் மிலேச்சத்தனமானவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

எமது பெண்ணினம் கல்வி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். சட்டக் கல்லூரி, மருத்துவம் மற்றும் இன்னோரன்ன உயர்ந்த துறைகளில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இருப்பது பெருமைக்குரியது என்பதை இந்த சந்தோச நாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்