சாய்ந்தமருது இளைஞர் சேவை நிலைய சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
தயட்ட கிருள தேசத்திற்கு மகுடம் மொழி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது இளைஞர் சேவை நிலையத்தில் சிங்கள, ஆங்கில மொழிக் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப் தலைமையில் றியாலுல் ஜன்னாஹ் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கௌரவ அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், விசேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா, சாய்ந்தமருது றியாலுல் ஜன்னாஹ் வித்தியாலய அதிபர் எம்.ஐ.சம்சுதீன், சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம்.ஐ.மதனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கணிணி மற்றும் ஹோட்டல் முகாமைத்துவம் போன்ற துறைகளில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த இளைஞர், யுவதிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
Comments
Post a Comment