Posts

மாவட்டங்களுக்கிடையிலான சிரேஷ்ட பிரிவு உதைபந்தாட்டம்

Image
அம்பாறை மாவட்ட அணி தெரிவு சிரேஷ்ட மாவட்ட அணிகளுக்கிடை யிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் முதலாவது சுற்றின் கடைசிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமலை மக்ஹெய்சர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் அம்பாறை மாவட்ட அணியினர் தன்னை எதிர்கொண்ட திருமலை மாவட்ட அணியினரை (04-03) கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டு, இரண்டாவது சுற்றுக்கு நுழைந்துள்ளனர். ஏற்கெனவே நடந்த போட்டிகளில் வவுனியா மாவட்ட அணியினரை (05-03) கோல்களினாலும் மன்னார் மாவட்ட அணியினரை வோக்ஓவர் அடிப்படையிலும், யாழ். மாவட்ட அணியினரை (04-03) கோல்களினாலும் வெற்றி பெற்ற அம்பாறை மாவட்ட அணியினர் மேற்படி சுற்றுப் போட்டியில், வட, கிழக்கு மாகாணத்தில் இருந்து முதலாவது சுற்றில் தெரிவான அணியாக விளங்குகின்றனர்.

பட்டதாரி பயிலுனர்களுக்கு இருநாள் விடுமுறைகள்

Image
பொது நிர்வாக அமைச்சு சுற்று நிருபம் பட்டதாரி பயிலு னர்களாக அரசாங் கத்தால் இணைத் துக் கொள்ளப்பட்டு ஒன்பது (09) மாதங்களை பூர்த்தி செய்த அனைத்து பட்டதாரி பயிலுனர்களுக்கும் இர ண்டு (02) நாள் விடுமுறைகளை வழங்குவதற்கு பொது நிர்வாக மற் றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. தரவுகள் மற்றும் தகவல்களைச் சேகரித்தல் முன்னுரிமை அடிப்படை யில் கருத்திட்டங்களையும் நிகழ்ச்சி திட்டங்களையும் இனங்காணல் போன்ற செயற்பாடுகளுக்காக 2011.12.14 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின்படி இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கு கீழ் வருமாறு விடுமுறைகள் வழங்குவதற்கு 2012.12.19 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ள்ளன. மேற்படி தீர்மானத்தின் அடிப்படையில் ஒன்பது (09) மாத பயிற்சிக் காலத்தை பூர்த்தி செய்துள்ள பட்டதாரி பயிலுனர்களுக்கு மாதம் ஒன்றிற்கு இரண்டு நாள் (02) அமய விடுமுறைகள் வழங்கப்படவுள்ளதுடன் ஒன்பது மாதம் பூர்த்திசெய்த பெண் பட்டதாரிகளுக்கு எண்பத்தி நான்கு (84) நாள் முழு வேதனத்துடன் கூடிய பிரசவ விடுமுறை களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட...

பப்பாசிப் பழத்தின் அதிசயம்

Image
இறக்காமம் ஆறாம் பிரிவிலுள்ள ஏ. எல். முனாஸ் என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் பறித்தெடுக்கப்பட்ட பப்பாசி பழமொன்றை வெட்டியபோது அதிசயிக்கத்தக்க வகையில் வெண்ணிற தோற்றத் தில் விதைகள் காணப்பட்டன. அதிசய  பப்பாசிப் பழத்தின் வெட்டுமுக தோற்றத்தையே  படத்தில் காண்கிறீர்கள் 

அம்பாறையில்மின்சாரம் தாக்கிய யானை…

Image
அம்பாறையில் யானை ஒன்று உயர் மின்னழுத்தத்தையுடைய மின் வேலியில் அகப்பட்டு நேற்று உயிரிழந்துள்ளது.

கல்முனை அல் -பஹ்ரியா மாணவர்களுக்கு அங்கு கற்பிக்கும் ஆசிரியரால் அச்சுறுத்தல்

Image
கல்முனை அல் -பஹ்ரியா  மாணவர்களுக்கு  அங்கு கற்பிக்கும்  ஆசிரியரால் ஒருவரால்  அச்சுறுத்தல் விடுக்கப் படுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். மருதமுனையை சேர்ந்த ஆசிரியரான இவர் தனியார் வகுப்புக்கு குறிப்பாக கல்முனை கருணா ஆசிரியரிடம் செல்லக் கூடாது எனவும்  அவரிடம்  சென்றால்  பாடசாலையை  விட்டு விலக்குவேன்  எனவும் தெரிவித்துள்ளார் . தான் பாடசாலையில்  வகுப்பு நடத்த உள்ளதாகவும்  அதற்க்கு ரூபா 300.00 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும்  அந்த ஆசிரியர்  பெற்றோர் சிலரிடம் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக பெற்றார் கூட்டம் ஒன்று  நாளை செவ்வாய் கிழமை பாட சாலையில் நடை பெறவுள்ளதாகவும் அந்த ஆசிரியரால் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக கல்லூரி அதிபர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர் தெரிவிக்கின்றனர். மேல் குறிப்பிட்ட கருணா ஆசிரியரின் கல்வி நிலையத்தில் குறித்த ஆசிரியர் சம்பளத்துக்கு கல்வி கற்பித்தவர் எனவும்  இவரை கருணா ஆசிரியர் இடை நிறுத்தியதால் அவர் மீது கொண்ட கோபம் காரணமாகவே இவ்வாறான நடவடிக்கையில் ஈடு பட்ட...

நற்பிட்டிமுனைமுஹம்மது சரீப் முஹம்மது யூசுப் (பூனக்குட்டி வாத்தியார் ) காலமானார்.

Image
கிழக்கு மாகாணத்தின் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த மூத்த கல்வியிலாளரும் ஒய்வுபெற்ற ஆசிரியருமான முஹம்மது சரீப் முஹம்மது யூசுப் (பூனக்குட்டி வாத்தியார் ) நேற்று சனிக்கிழமை காலமானார். நற்பிட்டிமுனை அரசினர் கலவன் பாடசாலை (தற்போதைய அல்-அக்ஸா மாகா வித்தியாலயத்தின்) பழைய மாணவரான இவர் முஹம்மது சரீப் ஹவ்வா உம்மா ஆகியோரின் சிரேஸ்ட புதல்வரார். 1954ஆம் ஆண்டு ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்ட இவர் 32 வருடங்களாக நாட்டின் பல பாகங்களிலும் தமிழ் ஆசானாக பணியாற்றி மாணவ சமூகத்தின் நன்மதிப்பை பெற்றுள்ளார். நற்பிட்டிமுனை பிரதேசத்தில் 90 வீதத்திற்கும் அதிகமான கல்வியலாளர்களையும் புத்திஜீவிகளையும் உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. இவர் மரணிக்கும்போது, வயது 84 ஆகும். இவரது நல்லடக்கத்தில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் புத்திஜீவிகள் உட்பட பிரமுகர்கள் பலர்  கலந்து கொண்டனர். இவர் கற்பித்த பாடசாலைகளின் விபரம் வருமாறு, மாத்தளை உக்குவu GMMS (1954.04.01 - 1956.09.01), மட்/நற்பிட்டிமுனை தமிழ் ஆண்கள் பாடசாலை (1956.09.01 – 1962.01.01), குரு/ முஸ்லிம் வித்தியாலயம் (1962.01.01 – 1963.01.01), மட்/ ...

தேசப்பற்று, சமூகப்பற்று, ஊர்ப்பற்று, வீட்டுப்பற்று என பல்வேறு வழிகளிலும் மக்கள் பற்றாளர்களாக இருக்க வேண்டும்

Image
நாட்டில் முஸ்லிம் பூர்வீகம் இல்லாமலாக்கப்படும் கைங்கரியம் மதவாத அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனை  எதிர்கொள்வதற்கு எமது சமூகம் ஒன்றுபட வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளா தெரிவித்தார். தேசப்பற்று, சமூகப்பற்று, ஊர்ப்பற்று மற்றும் வீட்டுப்பற்று என பல்வேறு வழிகளிலும் மக்கள் பற்றாளர்களாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதில் மிக முக்கியமானது தனது சமூகம் சார்ந்த பற்றாளர்களாக ஒவ்வொரு மனிதனும் இருக்க வேண்டும். அதைத்தான் எமது மார்க்கமும் எமது இறுதி நபி (ஸல்) அவர்களும் வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்கள் என அவர் கூறினார். கல்முனை அஸ் - ஸம்ஸ் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனையில் இடம்பெற்ற  இஸ்லாமிய கலை மற்றும் கலாசார நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும்போது, "இன்று உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக  ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அடக்கு முறைகள்,  வன்முறைகள்,  கொடூரங்களுக்கு மத்தியில் எமது சமூகப்பற்று மற்றும் ஒற்றுமை என்பன பூச்ச...

பத்து வயது சிறுவனுக்கு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக பூர்த்தி

கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த பத்து வயது சிறுவன் ஒருவரது ஆண்குறியில் சிறுநீர் வழி பிறப்பால் கீழ் நோக்கி இருந்தமையை சாதாரண நிலைக்கு கொண்டு வருவதற்காக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தள்ளது. சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையின் விNஷட சத்திர சிகிச்சை நிபூணரான மருதமுனையைச் சேர்ந்த டாக்டர் ஏ.டபிள்யூ.எம்.சமீம் அவர்களினாலே இச்சத்திர சிகிச்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவன் கல்முனையிலுள்ள வைத்தியசாலை ஒன்றின் அனுசரணையுடன் கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு சத்திர சிகிச்சைக்கான காலம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு காலம் கடத்தப்பட்ட நிலையிலேதான் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையில் இச்சிறுவன் அனுமதிக்கப்பட்டு இந்த சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்...

காதலர் தினத்தில் நாய்களும் மனிதர்களும் முத்தமிட்டால் எப்படியிருக்கும் !!! (PHOTOS)

Image
வித்தியாசமாக யோசிக்கும் மனிதன் இப்போது காதலர் தினத்தில் என்ன? செய்தான் தெரியுமா! தொடர்ந்த வாசியுங்கள். காதலர் தினத்தை முன்னிட்டு நாய்களும் அவற்றின் உரிமையாளர்களும் முத்தமிடும் போட்டி இடம்பெற்றது. இப்போட்டி அமெரிக்க ஒரேகன் மாநிலத்திலுள்ள போர்ட்லான்ட் நகரில் இடம்பெற்றுள்ளது. அங்கு 9ஆவது வருடமாக இடம்பெற்ற இப்போட்டியில் பியயு என்ற 12 வயது நாய் வெற்றி பெற்றுள்ளது. இந்த நாய் தனது உரிமையாளரான லிண்டா வால்டனை 45.8 செக்கன்கள் தொடர்ந்து முத்தமிட்டுள்ளது. இதில் இரண்டாம் இடத்தைப் பெற்ற சன்னி என்ற நாயும் மூன்றாம் இடத்தைப் பெற்ற டஜன்கோ என்ற நாயும் முறையே 16.8, 11.7 

முஸ்லிம் முதலமைச்சர் கலந்துகொள்ளும் முதல் முதலமைச்சர் மாநாடு

Image
மாகாண முதலமைச்சர்களின் 31 வது மாநாடு இன்று (16) பசறையில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.  இந்த முறை இன்று இடம்பெறும் மாகாண முதல்வர்களின் 31 வது மாநாட்டில் முதல் முறையாக ஒரு முஸ்லிம் முதலமைச்சார் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாணமுதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள முதல் முஸ்லிம்  முதலமைச்சர் என்பது குறிப்பிடத் தக்கது ஏற்கனவே நடைபெறவிருந்த இம் மாநாடு ஒத்திவைக்கப்பட்டிருந் நிலையில் இன்று இடம்பெற ஏற்பாடாகியுள்ளது .

அம்பாறை மாவட்ட அணி வெற்றி

Image
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் அகில இலங்கை ரீதியாக நடாத்திவரும், சிரேஷ்ட மாவட்ட அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் மூன்றாவது சுற்றின் ஒருபோட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் அம்பாறை மாவட்ட அணியினர், யாழ்ப்பாண மாவட்ட அணியினரை (04-03) கோல்களால் வெற்றிகொண்டனர். போட்டியின்போது பிரதம அதிதியாக மட்டு-அம்பாறை மாவட்டங்களின் விளையாட்டு வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ. ஏ. புஹைம் கெளரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும், கல்முனை மாநகரசபை உறுப்பினருமான சட்டத்தரணி ஏ. எம். றகீப், பொத்துவில் றைஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம். என். ராசுதீன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

தென் கிழக்கு பல்கலை பொறியியல் பீடத்திற்கு 100 மாணவர்கள் அனுமதி!

Image
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தென் கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்திற்கு 100 மாணவர்கள் புதிய கல்வி ஆண்டிற்கு அனுமதிக்கப்படவுள்ளனர். இதற்கான அனுமதியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது என பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார். சிவில், மின்னியல்;, இலத்திரனியல், பொறிமுறை, மற்றும் கணனி உட்பட ஐந்து துறைகள் தென் கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்திற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். “தென் கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடம் ஓலுவில் வளாகத்திலேயே இயங்கும். இதனாலேயே பொறியியல் பீட அங்குரார்ப்பண நிகழ்வு ஒலுவிலில் இடம்பெற்றது. எனினும் சிலர் தெரிவிப்பது போன்று அம்பாறையில் ஒருபோதும் பொறியியல் பீடம் செயற்படாது” என உப வேந்தர் தெரிவித்தார். எவ்வாறாயினும், பொறியீயல் பீடத்திற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். எனினும் பல்கலைக்கழக பொறியில் பீடத்திற்கு தேவையான அனைத்து வசதிகளை நிறைவு செய்வதற்கு இன்னும் 10 வருடங்கள். அதுவரை பொறி...

கல்முனையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம்!

Image
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேசத்தில் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை இனங்கண்டு அதனைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் மக்களுக்கான ஆலாசனைகளை வழங்கும் ஆரம்ப நிகழ்வு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம்.பசால் தலைமையில் நேற்று கல்முனை கடற்கரைப்பள்ளி வளாகத்தில் ஆரம்பமானது. இவ்வாரம்ப நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.இப்றாலெப்பை, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.நஜ்முடீன், மலேரியா தடுப்பு இயக்க பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.மர்சூக், கல்முனை அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் டாக்டர் ஏ.அசீஸ், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவகர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பட்டதாரி பயிலுனர்கள், பள்ளிவாயல் நிர்வாகத்தினர்கள், வர்த்தகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

ரஸ்ய வான்பரப்பில் வெடிப்பு; 400 பேர் காயம்! (காணொளி, படங்கள் இணைப்பு)

ரஸ்யாவின் யூரல் மலைத்தொடரில் அமைந்துள்ள செல்யாபின்ஸ்க் பகுதி வான்பரப்பில் விண்கல் வெடித்துச் சிதறியதில் சுமார் 400 பேர் வரை காயமடைந்துள்ளதுடன் இந்த வெடிப்பு சம்பவத்தின் போது நிலநடுக்கம் ஏற்பட்டதைப்போல் மிகப் பெரிய அதிர்வுகள் ஏற்பட்டதாக ரஸ்யா தொலைக்காட்சி தனது செய்தியில் தெரிவித்தது. எரி நட்சத்திரத்திரம் வெடித்துச் சிதறியபோது மிகப்பெரிய வெடிச்சத்தத்தை கேட்டதாகவும் அதைத் தொடர்ந்து பெரிய அளவில் தீப் பிழம்பு எழுந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்ததாகவும் இந்த வெடிப்பு நடைபெற்றபோது சில வீடுகளின் கூரைகள் நொறுங்கியதுடன் பல வீடுகளின் ஜன்னல்கள் வெடித்துச் சிதறியுள்ளதுடன் இந்த பகுதியில் தொலைத் தொடர்பு சேவைகளும் தடைப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசினால் ஒதுக்கப் படுவதாக கூறுவது வெட்கக் கேடு

Image
அபிவிருத்தியை எதிர்பார்த்து அரசுடன் இணைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசினால் ஒதுக்கப் படுவதாக கூறுவது வெட்கக் கேடு என கல்முனை மாநகர சபை எதிர்கட்சி தலைவர் ஏ.அமிர்தலிங்கம் தெரிவித்தார். கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் வியாழக் கிழமை (14) மாலை 2.30 மணிக்கு நடை பெற்றது. அங்கு உரையாற்றும் போதே மாநகர சபை உறுப்பினர் அ.அமிர்தலிங்கம் மேற்கண்டவாறு பேசினார். சபை அமர்வின் போது ஆளுந்தரப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான எம்.ஐ.எம்.முஸ்தபா அங்கு உரையாற்றுகையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நெல்சிப் திட்ட நிதிகள் தடைப்பட்டுள்ளன எம்மால் முன்மொழியப்பட்ட வேலைத்திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப் பட்டிருந்த போதிலும் அந்த நிதி தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்கு செலவு செய்யப்படவுள்ளது. நெல்சிப் திட்ட நிதி நிறுத்தப்பட்டிருப்பதனால்  அரசுடன் இணைந்துள்ளோம் என்பதற்காக வாய்மூடிகளாக இருப்பது நியாயமாகாது. எமது கட்சி அரசுடன் இணைந்து அவர்களுக்கு ஆதரவு வழங்குகின்ற போது எமக்கான நிதியில் கையடிக்க இடமளிக்கமுடியாது. இல்ல...

ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவ ரும் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டபோது எடுத்த படம்.

Image

காதலர் தினம் இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை

Image
காதலர் தினம் என்ற பெயரில் இன்று புனிதமான காதல் என்ற மனித வாழ்க்கையில் இளம்பருவத்தில் ஏற்படும் இன்பகரமான அனுப வத்தை கொச்சைப்படுத்தும் ஒரு தினம் கொண்டா டப்படுகிறது. காதலின் புனிதத்துவத்தை பாது காப்பதற்காக காதலர் தினம் அனுஷ் டிக்கப்படவில்லை. காதலர் தினம் என்ற பெயரில் வர்த்தகத்தை பிரபல் யப்படுத்துவதற்காகவே இந்த தினம் உலகெங்கிலும் இன்று நினைவுகூரப் படுகிறது. ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இன்று களியாட்ட விழாக்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அங்கு மதுவுக்கும், மாதுக்கும் இடையில் இனங் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு கொண்டாட்டங்கள் மனிதனின் சிந்தனை சக்தியை சீர்குலைக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. ‘அன்னலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்’ என்று இராமாயணத்தில் இராமருக்கும் சீதைக்கும் இடையிலான புனித அன்பு காதலாக மாறியது என் பதை கம்பன் கவி நடையில் விளக்கிக் கூறியிருக்கிறார். இதுதான் உண்மை யான காதல். நலன் தமயந்தி, சாவித்திரி சத்தியவான், மும்தாஜ் ஷாஜஹான், ரோமியோ ஜூலியட் ஆகியோரின் வாழ்க்கையில் காதல் புனிதத்துவம் பெற்றது. ஒருவனுக்கும் ஒருத்திக்கும் இடையிலான பந்த பாசத்தையே நாம் காதல் என்று அன்று அழை...

காதலர்களுக்கு வாழ்த்துக்கள்

Image

மிக பெரிய பிருட்டம்

Image
உலகில் மிகபெரிய பிருட்டத்தை கொண்ட பெண்ணாக அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜல்ஸ் நகரை சேர்ந்த மிசெல்  ரபினெலி விளங்குகிறார்.  இவரது பிருட்டமானது எட்டு அடி நீளம் கொண்டதாக காணப்படுகின்றது. நான்கு பிள்ளைகளின் தாயானா மிசெல் ரபினெலி 420 இறாத்தல் நிறைகொண்டவராகவும் உயரமான பெண்ணாகவும் காணப்பட்டாலும் இவர் சாதாரண பெண்களை போன்று இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. 8 அடி நீளம் கொண்ட தனது பிருட்டமானது  பொது இடங்களில் பலரின் பார்வையை தன் பக்கம் ஈர்ப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் இது குறித்து பெருமிதம் அடைகின்றார். 'எங்கு சென்றாலும் எனது பிருட்டம் காரணமாக பலரின் கவனத்தை நான் ஈர்த்தவளாகிறேன். நான் பாதையில் நடந்துசெல்லும்போது பலரது வீட்டின் ஜன்னல்கள் திறக்கும் சத்தம் என் காதுகளுக்கு கேட்கும். அப்போது மக்கள் என்னைப் பார்த்து சிரித்துகொண்டு இருப்பார்கள்' என்று அவர் கூறியுள்ளார். எனது இந்த தோற்றத்தை நான் நேசிக்கின்றேன். உணவை குறைத்துகொள்வதற்கான வழிவகைகள் குறித்து நான் யோசிக்கவில்லை. ஏனெனில் எனக்கு உடல்சார் நோய்கள் எதுவும் இல்லை" என மிசெல்  விளக்கியுள்ளார...

எம்மீது கை வைத்தால் இஸ்ரேலை சுக்குநூறாக்கி விடுவோம்; ஈரான் ஜனாதிபதி சூளுரை!

Image
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை முற்றிலுமாக அழித்து விடுவோம் என  ஈரானிய ஜனாதிபதி மஹ்மூட் அஹமடட் நஜாட் சூளுரைத்துள்ளார். இஸ்லாமிய கூட்டுறவு நாடுகளின் மாநாடு எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள ஈரான் ஜனாதிபதி எகிப்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஈரான் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் நினைத்துக் கொண்டுள்ளது. அப்படி தாக்குதல் நடத்தினால் ஈரானின் பதிலடி எப்படி இருக்குமோ? எதிர் விளைவு என்ன ஆகுமோ? என்ற அச்சத்திலும் இஸ்ரேல் உள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை தரைமட்டமாக்கி அழித்து விடுவோம். என நஜாத் குறிப்பிட்டுள்ளார்.

சம்மாந்துறை - வீரமுனை கிராமத்தில் மினி சூறாவளி

Image
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வீரமுனை கிராமத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக 10ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.  அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் வீசிய மினி சூறாவளியினால் பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் வீரமுனையின் 30 வீட்டுத்திட்டப் பகுதியிலும் இந்த மினி சூறாவளி வீசியுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவித்தன.  இந்த மினி சூறாவளி காரணமாக பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளடன் சில வர்த்தக நிலையங்களின் கூரைகளும் சேதமடைந்துள்ளன. 

இவ்வருடமும் களைகட்டிய பிரேசில் ‘கார்னிவெல்’ (PHOTOS & VIDEO)

Image
பிரேசிலில் வருடாந்தம் நடைபெறும் கார்னிவெல் கொண்டாட்டங்கள் நேற்று முன் தினம் ஆரம்பமாகியது. இக்கொண்டாட்டங்கள் 4 நாட்கள் வரை நடைபெறுவது வழமை. உலகில் இடம்பெறும் மிகப்பெரிய களியாட்ட விழாக்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது.

சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசத்தில் மினி சூறாவளி

Image
சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசத்தில் திடீரென வீசிய மினி சூறாவளியால் மாளிகைக்காடு பிரதான வீதியிலுள்ள கடைகள் சேதத்துக்குள்ளானது. இதனால் பிரதான வீதியிலுள்ள பள்ளிவாசலுக்கு சொந்தமான கடை ஒன்றும், கடைகளின் கூரைகள், பெயர்ப் பலகைகள் என்பனவும் சேதமடைந்துள்ளதுடன் வீதியிலுள்ள மரம் ஒன்றும் முறிந்து விழுந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக சீரற்ற காலநிலை மாற்றத்தினால் அடை மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புலியோடு உறவாடும் பெண்!

Image
'பழகும் விதத்தில் பழகி பார்த்தால் மிருகம் கூட நண்பனே '  என்று பாடினான் ஒரு கவிஞன். ஆம்! அன்பினால் சிங்கத்தின் மீசையையும் பிடிக்கலாம் என்பார்கள். இந்த கூற்றினை ஆதரிக்கும் வகையில் இந்தோனேஷிய வாசியான அப்துல்லா சோலே என்ற 31 வயதுடைய பெண் ஒருவர் , புலி ஒன்றினை உயிர் நண்பனாக்கிக் கொண்டுள்ளார். நான்கு வருடங்களாக இடைவிடாது தொடர்ந்து வரும் இவர்களின் நட்புக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகின்றதாம். உணவு நேரத்தின் போதும், விளையாடும் போதும் ஒன்றாக இருக்கும் சில வேளைகளில் இவர்கள் இடையிடையே சண்டை போட்டு கொள்வார்களாம். மனிதருக்கிடையிலேயே ஐக்கியம் இல்லை. எது எப்படி இருப்பினும் இந்த மிருக - மனித நட்பில் விரிசல் ஏற்படாதிருந்தால் சரி! 

இல்லறத்தில் இணைந்த குட்டையான ஜோடி!

Image
மூன்றே மூன்று அடி உயரமான குட்டை ஜோடியொன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளது. களுத்துறையை சேர்ந்த மணமகனும் மொரட்டுவையைச் சேர்ந்த மணமகளுமே இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர். மூன்றே மூன்று அடி உயரமான இருவருக்கும் மொரட்டுவையிலுள்ள ஹோட்டல் ஒன்றிலேயே இந்த திருமணம்  சகல சம்பிரதாயங்களுடன் அண்மையில் நடைபெற்றது. களுத்துறை கல்பானவைச் சேர்ந்த  மூன்றடி உயரமான 35 வயதான மணமகன் தர்மசிறி பிரேமலால், கடிகாரம் மற்றும் கையடக்க தொலைப்பேசி பழுது பார்க்கின்ற தொழில் நுட்பவியலாளர் ஆவார். அவரது உயரத்திற்கு ஏற்றவகையில் மொரட்டுவை, சொய்சாபுரவைச் சேர்ந்த 26 வயதான மணமகளான திலினி இரேஷா கிடைத்தார். அது மட்டுமன்றி இருவரின் ஜாதகமும் பொருத்தமாக அமைந்துள்ளது. இதனையடுத்தே குட்டையான இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.