கல்முனை அல் -பஹ்ரியா மாணவர்களுக்கு அங்கு கற்பிக்கும் ஆசிரியரால் அச்சுறுத்தல்

கல்முனை அல் -பஹ்ரியா  மாணவர்களுக்கு  அங்கு கற்பிக்கும்  ஆசிரியரால் ஒருவரால்  அச்சுறுத்தல் விடுக்கப் படுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். மருதமுனையை சேர்ந்த ஆசிரியரான இவர் தனியார் வகுப்புக்கு குறிப்பாக கல்முனை கருணா ஆசிரியரிடம் செல்லக் கூடாது எனவும்  அவரிடம்  சென்றால்  பாடசாலையை  விட்டு விலக்குவேன்  எனவும் தெரிவித்துள்ளார் . தான் பாடசாலையில்  வகுப்பு நடத்த உள்ளதாகவும்  அதற்க்கு ரூபா 300.00 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும்  அந்த ஆசிரியர்  பெற்றோர் சிலரிடம் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக பெற்றார் கூட்டம் ஒன்று  நாளை செவ்வாய் கிழமை பாட சாலையில் நடை பெறவுள்ளதாகவும் அந்த ஆசிரியரால் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக கல்லூரி அதிபர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

மேல் குறிப்பிட்ட கருணா ஆசிரியரின் கல்வி நிலையத்தில் குறித்த ஆசிரியர் சம்பளத்துக்கு கல்வி கற்பித்தவர் எனவும்  இவரை கருணா ஆசிரியர் இடை நிறுத்தியதால் அவர் மீது கொண்ட கோபம் காரணமாகவே இவ்வாறான நடவடிக்கையில் ஈடு பட்டு வருவதாகவும்  பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆசிரியரின் அழுத்தம் காரணமாக மாணவர்களின் கல்வி நிலை  பாதிக்கப் படுவதாக பெற்றோர் முறையிடுகின்றனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்