மாவட்டங்களுக்கிடையிலான சிரேஷ்ட பிரிவு உதைபந்தாட்டம்
அம்பாறை மாவட்ட அணி தெரிவு
சிரேஷ்ட மாவட்ட அணிகளுக்கிடை யிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் முதலாவது சுற்றின் கடைசிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமலை மக்ஹெய்சர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் அம்பாறை மாவட்ட அணியினர் தன்னை எதிர்கொண்ட திருமலை மாவட்ட அணியினரை (04-03) கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டு, இரண்டாவது சுற்றுக்கு நுழைந்துள்ளனர்.
ஏற்கெனவே நடந்த போட்டிகளில் வவுனியா மாவட்ட அணியினரை (05-03) கோல்களினாலும் மன்னார் மாவட்ட அணியினரை வோக்ஓவர் அடிப்படையிலும், யாழ். மாவட்ட அணியினரை (04-03) கோல்களினாலும் வெற்றி பெற்ற அம்பாறை மாவட்ட அணியினர் மேற்படி சுற்றுப் போட்டியில், வட, கிழக்கு மாகாணத்தில் இருந்து முதலாவது சுற்றில் தெரிவான அணியாக விளங்குகின்றனர்.
Comments
Post a Comment