நற்பிட்டிமுனைமுஹம்மது சரீப் முஹம்மது யூசுப் (பூனக்குட்டி வாத்தியார் ) காலமானார்.
கிழக்கு மாகாணத்தின் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த மூத்த கல்வியிலாளரும் ஒய்வுபெற்ற ஆசிரியருமான முஹம்மது சரீப் முஹம்மது யூசுப் (பூனக்குட்டி வாத்தியார் ) நேற்று சனிக்கிழமை காலமானார்.
நற்பிட்டிமுனை அரசினர் கலவன் பாடசாலை (தற்போதைய அல்-அக்ஸா மாகா வித்தியாலயத்தின்) பழைய மாணவரான இவர் முஹம்மது சரீப் ஹவ்வா உம்மா ஆகியோரின் சிரேஸ்ட புதல்வரார். 1954ஆம் ஆண்டு ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்ட இவர் 32 வருடங்களாக நாட்டின் பல பாகங்களிலும் தமிழ் ஆசானாக பணியாற்றி மாணவ சமூகத்தின் நன்மதிப்பை பெற்றுள்ளார்.
நற்பிட்டிமுனை பிரதேசத்தில் 90 வீதத்திற்கும் அதிகமான கல்வியலாளர்களையும் புத்திஜீவிகளையும் உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. இவர் மரணிக்கும்போது, வயது 84 ஆகும். இவரது நல்லடக்கத்தில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் புத்திஜீவிகள் உட்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இவர் கற்பித்த பாடசாலைகளின் விபரம் வருமாறு, மாத்தளை உக்குவu GMMS (1954.04.01 - 1956.09.01), மட்/நற்பிட்டிமுனை தமிழ் ஆண்கள் பாடசாலை (1956.09.01 – 1962.01.01), குரு/ முஸ்லிம் வித்தியாலயம் (1962.01.01 – 1963.01.01), மட்/ நற்பிட்டிமுனை GMMS (1963.01.01 – 1968.02.07), கமு/ சம்மாந்துறை மகாவித்தியாலயம் (1968.02.07 – 1968.04.20), கமு/ அல்- அக்ஸா மகாவித்தியாலயம் (1968.04.20 – 1986.09.20) ஓய்வுபெற்றது – 1986.09.20
Comments
Post a Comment