பத்து வயது சிறுவனுக்கு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக பூர்த்தி
கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த பத்து வயது சிறுவன் ஒருவரது ஆண்குறியில் சிறுநீர் வழி பிறப்பால் கீழ் நோக்கி இருந்தமையை சாதாரண நிலைக்கு கொண்டு வருவதற்காக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தள்ளது.
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையின் விNஷட சத்திர சிகிச்சை நிபூணரான மருதமுனையைச் சேர்ந்த டாக்டர் ஏ.டபிள்யூ.எம்.சமீம் அவர்களினாலே இச்சத்திர சிகிச்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவன் கல்முனையிலுள்ள வைத்தியசாலை ஒன்றின் அனுசரணையுடன் கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு சத்திர சிகிச்சைக்கான காலம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு காலம் கடத்தப்பட்ட நிலையிலேதான் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையில் இச்சிறுவன் அனுமதிக்கப்பட்டு இந்த சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இவ்வாறான சத்திர சிகிச்சையை கொழும்பு தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதாயின் இரண்டு இலச்சத்துக்கு மேற்பட்ட பணம் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சத்திர சிகிச்சை தொடர்பாக இச்சிறுவனின் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கையில்
தனது பிள்ளைக்கு இந்த பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு அவரை சாதாரண நிலைக்கு கொண்டு வந்ததுடன் தமது நீண்டகால துன்பகரமான நிலையிலிருந்து எம்மை மீட்டமைக்காக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலைக்கும் வைத்திய நிபுணருக்கும் நன்றிகளையும் பாராட்டையும் தெரிவிக்கின்றோம் என குறிப்பிட்டனர்.
Comments
Post a Comment