பட்டதாரி பயிலுனர்களுக்கு இருநாள் விடுமுறைகள்
பொது நிர்வாக அமைச்சு சுற்று நிருபம்
பட்டதாரி பயிலு னர்களாக அரசாங் கத்தால் இணைத் துக் கொள்ளப்பட்டு ஒன்பது (09) மாதங்களை பூர்த்தி செய்த அனைத்து பட்டதாரி பயிலுனர்களுக்கும் இர ண்டு (02) நாள் விடுமுறைகளை வழங்குவதற்கு பொது நிர்வாக மற் றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தரவுகள் மற்றும் தகவல்களைச் சேகரித்தல் முன்னுரிமை அடிப்படை யில் கருத்திட்டங்களையும் நிகழ்ச்சி திட்டங்களையும் இனங்காணல் போன்ற செயற்பாடுகளுக்காக 2011.12.14 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின்படி இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கு கீழ் வருமாறு விடுமுறைகள் வழங்குவதற்கு 2012.12.19 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ள்ளன.
மேற்படி தீர்மானத்தின் அடிப்படையில் ஒன்பது (09) மாத பயிற்சிக் காலத்தை பூர்த்தி செய்துள்ள பட்டதாரி பயிலுனர்களுக்கு மாதம் ஒன்றிற்கு இரண்டு நாள் (02) அமய விடுமுறைகள் வழங்கப்படவுள்ளதுடன் ஒன்பது மாதம் பூர்த்திசெய்த பெண் பட்டதாரிகளுக்கு எண்பத்தி நான்கு (84) நாள் முழு வேதனத்துடன் கூடிய பிரசவ விடுமுறை களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது சம்பந்தமான அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 04/ 2013 கொண்ட 2013 பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி இடப்பட்ட கடிதங்கள் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபைகளின் தலைமைச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் அனைவருக்கும் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Comments
Post a Comment