காதலர் தினம் இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை


காதலர் தினம் என்ற பெயரில் இன்று புனிதமான காதல் என்ற மனித வாழ்க்கையில் இளம்பருவத்தில் ஏற்படும் இன்பகரமான அனுப வத்தை கொச்சைப்படுத்தும் ஒரு தினம் கொண்டா டப்படுகிறது.
காதலின் புனிதத்துவத்தை பாது காப்பதற்காக காதலர் தினம் அனுஷ் டிக்கப்படவில்லை. காதலர் தினம் என்ற பெயரில் வர்த்தகத்தை பிரபல் யப்படுத்துவதற்காகவே இந்த தினம் உலகெங்கிலும் இன்று நினைவுகூரப் படுகிறது.
ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இன்று களியாட்ட விழாக்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அங்கு மதுவுக்கும், மாதுக்கும் இடையில் இனங் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு கொண்டாட்டங்கள் மனிதனின் சிந்தனை சக்தியை சீர்குலைக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
‘அன்னலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்’ என்று இராமாயணத்தில் இராமருக்கும் சீதைக்கும் இடையிலான புனித அன்பு காதலாக மாறியது என் பதை கம்பன் கவி நடையில் விளக்கிக் கூறியிருக்கிறார். இதுதான் உண்மை யான காதல்.
நலன் தமயந்தி, சாவித்திரி சத்தியவான், மும்தாஜ் ஷாஜஹான், ரோமியோ ஜூலியட் ஆகியோரின் வாழ்க்கையில் காதல் புனிதத்துவம் பெற்றது. ஒருவனுக்கும் ஒருத்திக்கும் இடையிலான பந்த பாசத்தையே நாம் காதல் என்று அன்று அழைத்தோம்.
இன்று ஒருவனுக்கு ஒருத்தி என்பதற்கு பதிலாக ஒருத்திக்கு பலர் ஒருவனுக்கு எத்தனையோ பேர் என்று கிண்டல் செய்யும் அளவுக்கு இந்த காதலர் தினம் காதலின் புனிதத்துவத்தை சீர்குலைத்துள்ளது. காதலர் தினம் விடலைப் பருவத்தில் உள்ள ஆண், பெண்களை நல்வழிப்படுத்துவதற்கு பதில் அவர்களை தவறான வழியில் இட்டுச் செல்வதற்கு ஒரு அடிதளமாக அமைந்துள்ளது.
காதலர் தினம் என்ற இந்த மாயையில் சிக்குண்டுள்ள நம்நாட்டு இளைஞர்களையும், யுவதிகளையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்