ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசினால் ஒதுக்கப் படுவதாக கூறுவது வெட்கக் கேடு


அபிவிருத்தியை எதிர்பார்த்து அரசுடன் இணைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசினால் ஒதுக்கப் படுவதாக கூறுவது வெட்கக் கேடு என கல்முனை மாநகர சபை எதிர்கட்சி தலைவர் ஏ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் வியாழக் கிழமை (14) மாலை 2.30 மணிக்கு நடை பெற்றது. அங்கு உரையாற்றும் போதே மாநகர சபை உறுப்பினர் அ.அமிர்தலிங்கம் மேற்கண்டவாறு பேசினார்.
சபை அமர்வின் போது ஆளுந்தரப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான எம்.ஐ.எம்.முஸ்தபா அங்கு உரையாற்றுகையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நெல்சிப் திட்ட நிதிகள் தடைப்பட்டுள்ளன எம்மால் முன்மொழியப்பட்ட வேலைத்திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப் பட்டிருந்த போதிலும் அந்த நிதி தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்கு செலவு செய்யப்படவுள்ளது. நெல்சிப் திட்ட நிதி நிறுத்தப்பட்டிருப்பதனால்  அரசுடன் இணைந்துள்ளோம் என்பதற்காக வாய்மூடிகளாக இருப்பது நியாயமாகாது. எமது கட்சி அரசுடன் இணைந்து அவர்களுக்கு ஆதரவு வழங்குகின்ற போது எமக்கான நிதியில் கையடிக்க இடமளிக்கமுடியாது. இல்லையேல் நாம் அரசுடன் இணைந்திருக்க முடியாது என உறுப்பினர் எம்.ஐ.எம்.முஸ்தபா அங்கு பேசினார்.
இதற்கு பதில் அளித்து பேசுகையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான எதிர் கட்சி தலைவர் அமிர்தலிங்கம் மேற்கண்டவாறு பேசினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது இவ்வாறான புறக்கணிப்புகள் சிறுபான்மை சமுகத்துக்கு இடம் பெறும் என்பதைக் கருத்தில் கொண்டே கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து போட்டியிட்டு ஆட்சியமைப்போம் முதலமைச்சர் பதவியையும் உங்களுக்கே வழங்குகிறோம் என்று கூறினோம். அவ்வாறு இடம் பெற்றிருந்தால் இரு இனத்துக்குமான உரிமையை உறுதிப்படுத்தியிருக்க முடியும். அதனை விடுத்து அபிவிருத்தியை மட்டும் கருத்தில் கொண்டு அரசுடன் இணைந்துள்ள நீங்கள் அரசு புறக்கணிக்கின்றது எனக் கூறுவது வெட்கக்கேடு என அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஏழு வருடமாக கல்முனை மாநகர சபையில் உறுப்பினராக இருந்து கொண்டு கல்முனை உடையார் வீதியின் அவல நிலை குறித்து மாநகர சபையை ஆட்சி செய்து வந்த முதல்வர்களிடம் முறையிட்டு வந்தேன.; எனினும் தற்போதய முதல்வர் சிராஸ் மீராசாஹிப் எமது கோரிக்கையை ஏற்று உடையார் வீதிக்கான வடிகானை 20இலட்சம் செலவில் செய்து முடிக்க முன் வந்தமைக்கு இச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக அமிர்தலிங்கம் கூறினார். எனினும் முதல்வர் எங்களது ஆலோசனையையும் பெற்று தமிழ் பிரதேச அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும் என உறுப்பினர் அமிர்தலிங்கம் தெரிவித்தபோது தமிழ் பிரதேசங்களுக்கு அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கின்றேன்.அந்த அடிப்படையில்தான் அவசர அவசரமாக கல்முனை உடையார் வீதி வடிகான் அமைப்பு வேலையும் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் அங்கு கூறினார்.
கூட்டத்தில் பிரதி முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் உட்பட உறுப்பினர்கள் பலரும் உறையாற்றினர்


Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்