எம்மீது கை வைத்தால் இஸ்ரேலை சுக்குநூறாக்கி விடுவோம்; ஈரான் ஜனாதிபதி சூளுரை!


ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை முற்றிலுமாக அழித்து விடுவோம் என  ஈரானிய ஜனாதிபதி மஹ்மூட் அஹமடட் நஜாட் சூளுரைத்துள்ளார்.
இஸ்லாமிய கூட்டுறவு நாடுகளின் மாநாடு எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள ஈரான் ஜனாதிபதி எகிப்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் நினைத்துக் கொண்டுள்ளது.
அப்படி தாக்குதல் நடத்தினால் ஈரானின் பதிலடி எப்படி இருக்குமோ? எதிர் விளைவு என்ன ஆகுமோ? என்ற அச்சத்திலும் இஸ்ரேல் உள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை தரைமட்டமாக்கி அழித்து விடுவோம். என நஜாத் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்