கல்முனையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம்!
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேசத்தில் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை இனங்கண்டு அதனைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் மக்களுக்கான ஆலாசனைகளை வழங்கும் ஆரம்ப நிகழ்வு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம்.பசால் தலைமையில் நேற்று கல்முனை கடற்கரைப்பள்ளி வளாகத்தில் ஆரம்பமானது.
இவ்வாரம்ப நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.இப்றாலெப்பை, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.நஜ்முடீன், மலேரியா தடுப்பு இயக்க பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.மர்சூக், கல்முனை அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் டாக்டர் ஏ.அசீஸ், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவகர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பட்டதாரி பயிலுனர்கள், பள்ளிவாயல் நிர்வாகத்தினர்கள், வர்த்தகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment