அம்பாறை மாவட்ட அணி வெற்றி
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் அகில இலங்கை ரீதியாக நடாத்திவரும், சிரேஷ்ட மாவட்ட அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் மூன்றாவது சுற்றின் ஒருபோட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் அம்பாறை மாவட்ட அணியினர், யாழ்ப்பாண மாவட்ட அணியினரை (04-03) கோல்களால் வெற்றிகொண்டனர்.
போட்டியின்போது பிரதம அதிதியாக மட்டு-அம்பாறை மாவட்டங்களின் விளையாட்டு வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ. ஏ. புஹைம் கெளரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும், கல்முனை மாநகரசபை உறுப்பினருமான சட்டத்தரணி ஏ. எம். றகீப், பொத்துவில் றைஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம். என். ராசுதீன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
Comments
Post a Comment