Posts

Showing posts from May, 2014

சட்ட விரோத மாடுகள் சவளக்கடையில்

Image
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு வரப்பபட்ட 08 மாடுகளை சவளக்கடை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். வெல்லாவெளி பிரதேசத்திலிருந்து சம்மாந்துறை பிரதேசத்திற்கு இன்று அதிகாலை சட்டவிரோதமாக மாடுகளை கொண்டுவருவதாக சவளக்கடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே சவளக்கடை கினற்றடி சந்தியில் வைத்து மாடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.  இது தொடர்பில் சம்மாந்துறை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட மாடுகளையும் சந்தேக நபரையும் கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சவளக்கடை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.சாஹீர் தொரிவித்தார்.  

கல்முனை ஸ்ரீ சித்தி விநாயகர் தரவை பிள்ளை ஆலய எண்ணெய்க்காப்பு நிகழ்வு இன்றும் நாளையும்

Image
கல்முனை ஸ்ரீ சித்தி விநாயகர்  தரவை பிள்ளை ஆலய மகா கும்பாபிசேகம்  திகட் கிழமை நடை பெறவுள்ளது. இன்று சனிக்கிழமை எண்ணெய்க்காப்பு நடைபெற்றது . நாளையும் எண்ணெய்க்காப்பு நிகழ்வு நடை பெறும் . இன்றைய எண்ணெய்க்காப்பு  நிகழ்வில் பக்தர்கள் பலர்  திரண்டிருந்தனர் .

கல்முனை முஸ்லிம் நிருவாகத்துக்கு சிங்களவரா?????

Image
கல்முனை முஸ்லிம் பிரதேச செயலக பிரதேச செயலாளராக மொகான் விக்ரம ஆராட்சி நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாகச் செயற்படும் வண்ணம் பொது நிருவாக உள்ளாட்டு அலுவல்கள் அமைச்சு இந்நியமனத்தை வழங்கியுள்ளது. ஏற்கனவே  எம்.எம்.நௌபல்  பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது  அவரது திடீர் இடமாற்றத்தை தொடர்ந்து  கல்முனை பதில் பிரதேச செயலாளராக எம்.ஐ.எம்.ஹனீபா கடமையாற்றிய நிலையிலேயே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மொகான் விக்ரம மஹஓயா பிரதேச செயலக பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வருகின்றார். கல்முனை முஸ்லிம் பிரதேச செயலக வரலாற்றில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

நடிகை ’அழகி’ மோனிகா இஸ்லாம் மதத்திற்கு மாற்றம்

Image
நடிகன் உட்பட ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மோனிகா, அழகி படத்தின் மூலம் நாயகியாக நடித்து புகழ்பெற்றார்.   அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்துள்ள அவர் சிலந்தி படத்தில் கிளாமரில் தாராளம் காட்டினார்.   தமிழ் தவிர வேறு மொழிகளிலும் நடித்துள்ள மோனிகா,  தற்போது மதம் மாறியுள்ளார்.   அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.

நிந்தவூருக்கும் ஒலுவிலுக்கும் இடையில் நிரந்தர பொலிஸ் நிலையம் ஒன்றை திறக்க நடவடிக்கை

Image
ரவூப் ஹக்கீம்  அமைச்சர்  சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நிரந்தர கட்டிடம் நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பெயரில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சா் எம்.ஐ.எம்.மன்சூா், கிழக்கு மாகாண சபை உறுப்பினா் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், சம்மாந்துறை பிரதேச செயலாளா் ஏ.மன்சூா் உள்ளிட்ட மாவட்ட நீதிபதிகள், சட்டத்தரணிகள், பொலிஸ் திணைக்கள உயா் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனா். இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், மக்களது காலடிக்கு சேவையை கொண்டு செல்லும் அரசின் திட்டத்தின் கீழும் நிந்தவூர் மக்களின் தேவையை கருத்தில் கொண்டும் அங்கும் சுற்றுலா நீதிமன்றம் ஒன்றை அவசரமாக திறக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதேவேளை நிந்தவூர் ஒலுவில் மக்களின் தேவையை கருத்தில்கொண்டு நிந்தவூருக்கும் ஒலுவிலுக்கும் இடையில் நிரந்தர பொலிஸ் நிலையம் ஒன்றை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். அம்பாறை நீதி நிர்வாக பிரதேசத்துடன் இணைக்கப்பட்டுள்ள இறக்காமம் ப...

அகில இலங்கை தமிழ் மொழித்தின கிழக்கு மாகாண மட்டப் போட்டிகள் நாளை மறு தினம்

Image
அகில இலங்கை தமிழ் மொழித்தின கிழக்கு மாகாண  மட்டப் போட்டிகள் நாளை மறு தினம் ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு மாவட்ட பட் /களுதாவளை மகா வித்தியாலய ஓன்று கூடல் மண்டபத்தில்  நடை பெறவுள்ளது. மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம்  தலைமையில் இடம் பெறவுள்ள போட்டி நிகழ்வுகளுக்கு கிழக்கு மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர்கள்,பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்,உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் அழைக்கப் பட்டுள்ளனர்.

கல்முனையில் சகல வசதிகளையும் கொண்ட நீதி மன்ற கட்டிட தொகுதி ஒன்றை அமைப்பது தொடர்பான விரிவான கலந்துரையாடல்

Image
  கல்முனை நீதி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள நீதி மன்ற கட்டிடங்களின் வசதிகள்  பற்றாக்குறை தொடர்பான கலந்துரையாடல்  இன்று நீதிமன்றக் கட்டிடத்தில் நடை பெற்றது . பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரது தலைமையில் இடம் பெற்ற  இச்சந்திப்பில்  கல்முனை  மேல் நீதிமன்ற , நீதிவான் நீதிமன்ற ,மாவட்ட நீதிமன்ற  நீதிபதிகள் உட்பட  மட்டக்களப்பு மாவட்ட நீதிபதிகளும் ,சட்டத்தரணிகள் சங்க  அங்கத்தவர்களும்  கலந்து கொண்டனர். கல்முனையில் சகல வசதிகளையும் கொண்ட  நீதி மன்ற கட்டிட  தொகுதி ஒன்றை அமைப்பது தொடர்பான விரிவான கலந்துரையாடல் இடம் பெற்றதுடன்  மட்டக்களப்பு நீதிமன்றங்களின் குறைபாடுகளும்  கண்டறியப்பட்டன . கல்முனைக்கு வருகை தந்த  பிரதம நீதியரசரை கல்முனையின் முதல்வர்  சட்டத்தரணி நிசாம் காரியப்பர் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றார். நிகழ்வில் பாடசாலை அதிபர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மணமகன் இல்லாத திருமண சம்பந்தம் கல்முனை மாநகர சபை மண்டபத்தில்

Image
  கல்முனை மாநகர சபை பிரிவுக்குட்பட்ட தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கல்முனை மாநகர சபை மண்டபத்தில் இன்று மாலை உயர்மட்டப் பேச்சு நடைபெற்றது.  கல்முனை பிராந்தியத்தில் வளர்ந்து வரும் தமிழ், முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது. இந்த கூட்டத்தில் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்  கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கல்முனை மாநகர சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்  படாமையால்   அவர்களும் கலந்து கொள்ளவில்லை. இக்கூட்டத்தை கேள்விப் பட்டு  பார்வையிட சென்ற உறுப்பினர்கள் இருவர் ஒதுங்கிக் கொண்டனர்.   மணமகன் இல்லாத திருமணம் என அரசியல் பிரமுகர்கள் பலர்  இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கின்றனர்.  குறிப்பாக, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இக்கூட்டத்தில் முதன்மை விடயங்களாக ஆராயப்பட்டு வருகின்றன  இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்...

மன்சூர் எனும் மறவாத நிழல்

Image
இன்று தனது 81ஆவது வயதில் காலடி வைக்கும் முன்னாள் அமைச்சர் கௌரவ ஏ.ஆர். மன்சூர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். 1933.05.30இல் கல்முனையில் பிறந்த முன்னாள் அமைச்சர் கௌரவ ஏ.ஆர். மன்சூர் அவர்கள் எமது மண்ணின் அரசியல் வரலாற்றுப் பதிவுகளில் ஒருவாக திகழ்கின்றார். 1970 களில் இலங்கை பிரதமரான டட்லி சேனநாயக்க அவர்களின் அழைப்பில்பேரில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 1977ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் கல்முனைத் தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். 1977ம் ஆண்டு இலங்கை நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜயவர்த்தன அவர்கள் கௌரவ ஏ.ஆர். மன்சூர் அவர்களை யாழ் மாவட்டத்திற்கான முதலாவது மாவட்ட அமைச்சராக நியமித்தார். யாழ் மாவட்ட அமைச்சராக சுமார் ஒரு வருடம் சேவையாற்றினார். பின்னர் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் சுமார் 12வருடங்கள் சேவை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்இ கப்பல்இ வர்த்த...

கல்முனை அல்-மிஸ்பா மாணவ தலைவர்கள் முடிசூட்டு விழா

Image
கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் ஆங்கில கற்கை நிலையம் திறந்து வைத்தல், மாணவர் தலைவர்கள் அறிமுக நிகழ்வு மற்றும் மணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டு வழாவும் இன்று இடம்பெற்றது. பாடசாலை அதிபர் ஏ.எம்.எம். பரீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வரும், ஶ்ரீ.ல.மு.கா. பிரதி செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி கௌரவ எம். நிஸாம் காரியப்பர் அவர்களும், கௌரவ அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினரும், ஶ்ரீ.ல.மு.கா. அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் அவர்களும், மற்றும் பாடசாலையின் உதவி அதிபர் எம்.எச்.எம்.அன்சார், வலைய அதிபர்கள் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் “லீடர்ஸ்” சஞ்சிகை வெளியிடப்பட்டதுடன், மாணவ தலைவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு சின்னம் சூட்டி கௌரவிக்கப்பட்டது. இவ்விழாவில் பிரதம அதிதி அவர்களுக்கு நினைவு வாழ்த்து மடல் வழங்கப்பட்டதோடு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

கல்முனை வலயத்திலிருந்து ஒப்பந்த அடிப்படையில் வெளி வலயத்தில் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு தீர்வு!

Image
கல்முனை கல்வி வலயத்திலிருந்து அக்கரைப்பற்று, திருக்கோவில் ஆகிய கல்வி வலயங்களுக்கு 02 வருட காலம் சேவையாற்றுவதற்காக இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் சேவைக்காலம் முடிவடைந்து பல மாதங்கள் கடந்துள்ளதனால் அவர்களை கல்முனை கல்வி வலயத்திற்கு மீண்டும் இடமாற்றுமாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைசர் எம்.எஸ்.உதுமாலெப்பை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய மிகவிரைவில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண கல்விச் செயலாளரின் கடிதத்தின் பிரகாரம் 02 வருடங்களை பூர்த்தி செய்யும் ஆசிரியர்களுக்கு கல்முனை வலயத்திற்கு இடமாற்றம் வழங்கப்படும் என்பதற்கிணங்க மாகாண கல்வித் திணைக்களத்தின் வாக்குறுதியை நம்பி 02 வருடங்கள் வெளி வலயங்களில் சேவையை பூர்த்தி செய்த எங்களுக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் எழுத்து மூலமாக வழங்கப்பட்ட வாக்குறுதியை மீறி இதுவரைக்கும் இடமாற்றம் வழங்கப்படாமை மிகுந்த மன உளைச்சலையும், ஏமாற்றத்தையும், திணைக்களத்தின் மீது அவ நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்...

பிரதம நீதி அரசர் மொஹான் பீரிஸ் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம்

Image
  நாளை வெள்ளிகிழமை பிரதம நீதி அரசர் மொஹான் பீரிஸ்  அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார் . நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பை  ஏற்று  வருகை தரும்  பிரதம நீதியரசர்  சம்மாந்துறை மற்றும் கல்முனையில் நடை பெறவுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார் . சம்மாந்துறையில் கட்டிமுடிக்கப் பட்ட புதிய நீதிமன்றக் கட்டிடம்  காலை 10.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. நீதி  அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம் பெறும்  நிகழ்வில்  பிரதம நீதியரசரினால் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்வுள்ளதோடு  பகல் 11.00 மணிக்கு கல்முனை நீதி மன்ற வளாகத்தில் கட்டிடமொன்றுக்கு அடிக்கல் நடும் வைபவமும் இடம் பெறவுள்ளது. இந்நிகழ்வுகளில் நீதிபதிகள் உட்பட  சட்டத்தரணிகளும் பிரதேச அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மாணவர்கள் அடையாள அட்டைகள் பெற இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கவேண்டும்!

Image
ஜீ .சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு சகல பாடசலை அதிபர்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஜி. ஏ. ஆர். தேவப்பிரிய தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, இந்த வருட இறுதியில் நடைபெறும் பரீட்சைக்கு சுமார் நான்கு இலட்ச பாடசாலை மாணவர்கள் தோற்றுகின்றனர். அவர்களில் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் மாணவர்களின் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களே இதுவரை கிடைத்துள்ளன. இம்மாதம் 31ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதால் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் எஞ்சியுள்ள மாணவர்களின் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை உடனடியாக அனுப்பி வைக்க பாடசாலை அதிபர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறினார்.

வாகனங்களில் ஒலியை எழுப்புவதில் புதிய கட்டுப்பாடு

Image
வாகன ஹோர்ன் களின் மூலம் எழுப்பப் படும் ஒலியை கட்டுப் படுத்த பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளனர். ஹொர்ன்களை பயன்படுத்துவது, விபத்துகளை தவிர்ப்பதற்காகவும், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்லும் போது தேவையான இடத்தை பெற்றுக் கொள்வதற்காகவுமே பயன்படுத்த வேண்டும். எனினும் அடுத்த பஸ் வண்டி சாரதிக்கு வணக்கம் சொல்லவும். நலம் விசாரிக்கவும், தரிப்பிடங்களில் பயணிகளை ஏற்றவும் மற்றைய வாகனத்தை விட தன்னிடம் ஒலி எழுப்பக் கூடிய ஹோர்ன் உள்ளது என்பதை காட்டுவதற்காகவே ஹோர்ன்களை பயன்படுத்துகிறார்கள். பல்வேறு விதமான ஒலியை எழுப்பக்கூடிய, விதம் விதமான ஹோர்ன்களை பயன்படுத்துகிறார்கள். இனி அவ்வாறில்லாமல் அங்கீகரிக்கப்பட்ட 105 டெசிபல் அலகைக் தொண்டதாக ஒலி எழுப்ப வேண்டும் என்ற சட்டத்துக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்,மாலை தீவு நாட்டு தூதுவராலய முதல் செயலாளர் அஹமட் முஜ்தபாவை சந்தித்து கலந்துரையாடினார்.

Image
(அகமட் எஸ். முகைடீன்) கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெற்றோபொலிடன் கல்லூரியின் ஸ்தாபக தலைவரும் தேசிய காங்கிரசின் கிழக்குமாகாண இளைஞர் அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப், மாலை தீவு நாட்டு தூதுவராலய முதல் செயலாளர் அஹமட் முஜ்தபாவை    நேற்று மாலை தூதுவராலயத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது சமகால அரசியல் மற்றும் கல்முனை மாநகர பிரதேச வாழ் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்வதற்கு மாலை தீவு நாடு பங்களிப்புச் செய்வதன் சாத்தியப்பாடு என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மாணவர்களை தூண்டி ஆசிரியை ஒருவருக்கு கை தொலைபேசி மூலம் தூசித்த ஆசிரியர் ஒருவர் கல்முனை பொலிசாரினால் கைது

Image
கல்முனை பிரதேச பாடசாலை ஒன்றில் மாணவர்களை தூண்டி ஆசிரியை ஒருவருக்கு  கை தொலைபேசி மூலம் தூசித்த  ஆசிரியர் ஒருவர் கல்முனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளார் . குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் சம்பந்தப் பட்ட ஆசிரியை கல்முனை போலிஸ் நிலையத்தில்   இன்று முறைப்பாடு செய்ததை அடுத்தே  குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டிருப்பதாக  கல்முனை போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்  இந்த சம்பவம் தொடர்பாக  குறித்த ஆசிரியை செய்யப்பட்ட  முறைப்பாட்டில்  தெரிவிக்கப் பட்டுள்ளதாவது  தனக்கு ஒவ்வொரு நாளும் எனது கை தொலை பேசிக்கு அநாமோதய அழைப்புக்கள் வந்தன  எனக்கு யார் என்பதை அடையாளம் காண முடியாதிருந்தது . எனக்கு அழைப்பு எடுப்பவர் கூடாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி பேசிக்கொண்டே இருப்பார் . எனினும் தொடர்ந்து பேசியதன்  காரணத்தினால் ஓரளவு என்னால்  இந்தக் குரல் இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் என்பதை  சந்தேகித்தேன் . அதன் பிரகாரம் பாடசாலையில் வைத்து அம்மாணவனை அழைத்து நீர் ஏன் எனக்கு...

கல்முனை மாநகர சபையில் நடை பெற்ற சிறிய விடயத்தை ஊடகவியலாளர்கள் பெரிதாக்கினார்களா ?

Image
எனக்கும் கல்முனை முதல்வருக்கும் உள்ள நெருக்கமான உறவை பிரித்து எங்களுக்குள் பகைமையை வளர்ப்பதற்கு  கல்முனையில் உள்ள அரசியல் வாதிகள் சிலர் முயற்சிக்கின்றனர்  அதன் ஒரு அங்கமே கல்முனை மாநகர சபையில்  சமீபத்தில் இடம் பெற்ற நாடகமாகும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.ரியாஸ் தெரிவித்தார் . நேற்று கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு முதல்வர் நிசாம் காரியப்பர் தலைமையில் இடம் பெற்றது .அங்கு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் . இதனை சில ஊடகங்கள் திரிவு படுத்தி எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்  அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளேன் . இந்த  விடயத்தை பூதாகரமாக்கிய  தகப்பனின்  ஜனாஸாவுக்கு கூட செல்லாத அந்த ஊடகவியலாளரை நான் கண்டிக்கின்றேன் என்றார். எனது  நெருங்கிய தமிழ் நண்பர்கள் உள்ளனர் அவர்களுக்கும்  எனக்கும் இடையில் குரோதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் . மாநகர சபையின் செயலாளர் புலேந்திரன்  சம்பவம் நடந்த மறு தினமே என்னிடம் வந்து  எமக்குள் நடந்த சிறிய சம்பவத்தை  பெரிதாக்கி பூதாகரமாக்குகின்றனர் . என தெரி...

கல்முனையில் கள்வன் பொலிஸ்

Image
கல்முனைக்குடி தைக்கா வீதியிலுள்ள வீடொன்றில் பணம் கொள்ளையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொது மக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். இச்சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை சுபஹ் தொழுகை நேரத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை குறித்த வீட்டில் குடும்பஸ்தர் சுபஹ் தொழுகைக்காக வீட்டை திறந்து வைத்த நிலையில் பள்ளிவாசல் சென்றுள்ளார். இவ்வேளை வீட்டினுள் நுழைந்து பணத்தை கொள்ளையிட்ட சந்தேக நபரைக் கண்டு அவ்வீட்டிலுள்ளவர்கள் சத்தமிட்டனர். இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் அயலவர்களின் உதவியுடன் மடக்கிப் பிடிக்கப்பட்டார். பின்னர் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கல்முனைப் பொலிசார் விரைந்து, சந்தேக நபரை கைது செய்தனர். குறித்த சந்தேக நபர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் (வயது 40) என தெரிவிக்கப்படுகிறது. இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கட்டிடம் இருந்தும் நூலகம் வாடகை கட்டிடத்தில் இயங்குவது கல்முனை மாநகர சபையின் இயலாமை

Image
யு.எம்.இஸ்ஹாக்  கரவாகு மேற்கு பொது நூலகம் 42இலட்சம் ரூபா செலவில் கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதங்கள்  கடந்தும் சேனைக் குடியிருப்பு கமநல சேவை மத்திய நிலைய கட்டிடத்தில் 1000 ரூபா வாடகைக்கு நூலகம் இயங்குவது கல்முனை மாநகர சபையின் கையாலாகாத் தனத்தைக் காட்டுவதாக கல்முனை மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபார் கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வூ கூட்டத்தில் குற்றஞ்சாட்டினார். கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வூ மாநகர முதல்வர் சட்டமுதுமானி நிஸாம் காரியப்பர் தலைமையில் செவ்வாய்க்ககிழமை (27) சபா மண்டபத்தில் நடை பெற்றது. கல்முனை மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபார் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் புதிய நூலக கட்டிடம் அமைப்பதற்காக பழைய கட்டிடம் இடிக்கப்பட்ட போது நூலகம் தற்காலிகமாக சேனைக் குடியிருப்பு கமநல சேவை மத்திய நிலைய கட்டிடத்திற்கு வாடகைக்கு இடமாற்றப்பட்டது. எனினும் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வாடகை கட்டிடமானது  வசதிகள் எதுவூமற்ற நிலையில் வாசிப்பு பகுதி மட்டுமே இயங்கி வருகின்றது. இதனால் இப்பகுதில் உள்ள தமிழ் ம...

பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி

Image
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர்களுக்கும் பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகௌடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மணிசங்கர் அய்யர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு நரேந்திரமோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் மூவர் மலேசியாவில் கைது!

Image
எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கோலாலம்பூர், பி.ஜே. கிலாங் எனும் பிரதேசத்தில் வைத்தே இம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மே மாதம் 15ஆம் திகதி அமைக்கப்பட்ட விசேட பயங்கரவாத குற்றப்பிரிவினரின் மூலமே குறித்த சந்தேக நபர்கள், கிலாங் மற்றும் பெடலிங் ஜெயா ஆகிய நகரங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையகத்தினால் அங்கீகாரிக்கப்பட்ட அட்டைகளை வைத்திருந்ததாகவும், முக்கியமாக தேசிய அளவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை பரப்புவதற்காக முனைந்துள்ளனர் எனவும் சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் உயர் அதிகாரியான டான் ஸ்ரீ காலிட் அபூபக்கர் தெரிவித்துள்ளார். 2004 ஆம் ஆண்டிலேயே இவர்கள் இங்கு வந்திருப்பதாக தெரிவித்த அவர், அவர்களது இயக்கத்தை இந்த நாட்டினை அடிப்படையாக கொண்டு பிரசாரம் செய்யவும் முனைந்துள்ளதுடன் இயக்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக நன்கொடைகளையும் சேர்த்து...

ஜனாதிபதி நாளை இந்தியா செல்கிறார்!

Image
இந்தியப் பிரதமராக  நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள விழாவில் கலந்துகொள்வதற்காக   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை காலை இந்தியா செல்வார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. நாளை மாலை இந்தியக் குடியரசுத் தலைவரின் மாளிகையில் நடைபெறவுள்ள மோடியின் பதவியேற்பு விழாவிற்கு 8 நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தான் உட்பட அனைத்து   நாடுகளும் மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதை உறுதி செய்துவிட்டன. இந்த பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு, நரேந்திர மோடி நாளை 26ஆம் திகதி இராப்போசன விருந்தளிக்க வுள்ளார். பதவியேற்புக்கு மறுநாளான, 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, வெளிநாட்டுத் தலை வர்களுடன் நரேந்திர மோடி தனித்தனியாக சந்திப் புகளை மேற்கொள்ளவுள்ளார். இச்சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பிரதமர் மோடி தனியாகச் சந்தித்து இரு நாட்டு நல்லுறவு தொடர்பாகக் கலந்துரையாடுவார். சம்பிரதாய பூர்வமான இந்தச் சந்திப்புகள் தலா 30 நிமிடங்கள் வரை நீடிக் கும் என்றும் புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அநாதரவான சடலத்தை பொறுப்பெடுங்கள்

Image
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு- மரணமடைந்த நபர் ஒருவரின் சடலத்தை உரிமை கோர எவரும் முன்வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அக்கரைப்பற்று, அம்பாறை வீதியை முகவரியாகக் கொண்ட 54 வயது நிரம்பிய ரட்ணசிங்கம் எனும் பெயரைக் கொண்ட இவர் கடந்த 2014-05-05 ஆம் திகதி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 14 ஆம் திகதி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தா ர். எனினும் சிகிச்சை பயனின்றி 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். இவரது சடலம் வைத்திய சாலை சைவச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது  இது குறித்து இவரது மேற்படி முகவரிக்கு பொலிஸ் மூலம் தகவல் கொடுக்கப்பட்டும்  ஐந்து நாட்கள் கடந்தும்  இதுவரை எவரும் சடலத்தை கொண்டு செல்ல முன்வரவில்லை என கல்முனை பொலிசாரினால்  தெரிவிக்கப்படுகிறது.. ஆகையினால் இவரது உறவினர்கள் யாராவது இருந்தால் இச்சடலத்தை பொறுப்பேற்க முன்வருமாறு வைத்தியசாலை நிர்வாகமும் ,கல்முனை பொலிசாரும் கேட்டுள்ளனர்  

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக 9 ஆவது பட்டமளிப்பு விழா

Image
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒன்பதாவது பட்டமளிப்பு விழா இன்று சனிக்கிழமை, பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.  இந்தப் பொதுப் பட்டளிப்பு விழாவின் ஆரம்பத்தில் மூவின கலாசார நிகழ்வுகள் சகிதம் பல்கலைக்கழக வேந்தர் ஊர்வலம் இடம்பெற்றபோது பட்டம் பெறும் மாணவர்கள் மற்றும் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.முஹம்மட் இஸ்மாயில் மற்றும் அதிதிகள் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.  பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் அச்சி முஹம்மட் இஸ்ஹாக் பட்டமளிப்பு விழாவைத் தொடக்கி வைத்ததுடன், பட்டம் பெறும் மாணவ, மாணவியருக்கான சத்தியப் பிரமாணமும் செய்து வைத்த அதேவேளை பட்டங்களையும் வழங்கினார்.  இதேவேளை விழாவில் நிதி திட்டமிடல், மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளரும், திறைசேரி செயலாளருமான கலாநிதி பீ.பி.ஜெயசுந்தர பட்டமளிப்பு விழா சிறப்புரையும் ஆற்றினார். மேலும் இப்பொதுப்பட்டமளிப்பு விழாவையொட்டி ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிவான் சீ.ஜி.வீரமந்திரி ஆகிய இருவருக்கும் கௌரவ கலாநிதி பட்டங்களும் வழங்கப்பட்டன. அதேவேளை கலை, கலாச...

செலான் வங்கி கிளை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் திறந்து வைப்பு

Image
மாணவர்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் செலான் வங்கி கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ஸ்ட்ரீபன்  மத்தியு  தலைமையில்  வெள்ளிக்கிழமை 23.05.2014 நடைபெற்ற நிகழ்வில் செலான் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் கலாநிதி நிரஞ்சன் பத்மநாதன்  பிரதம அதிதியாகவும் கல்முனை வங்கி கிளை முகாமையாளர் ஏ.ஜி.ஜோசேப்  உட்பட வங்கி அதிகாரிகள் பலரும் கலந்து  சிறப்பித்தனர் . நிகழ்வில் கல்முனை வங்கி கிளையில் சிறுவர் வைப்பு செய்த சிறார்களுக்கு பரிசுகளும் வழங்கி வைக்கப் பட்டன