நிந்தவூருக்கும் ஒலுவிலுக்கும் இடையில் நிரந்தர பொலிஸ் நிலையம் ஒன்றை திறக்க நடவடிக்கை
சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நிரந்தர கட்டிடம் நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பெயரில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சா் எம்.ஐ.எம்.மன்சூா், கிழக்கு மாகாண சபை உறுப்பினா் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், சம்மாந்துறை பிரதேச செயலாளா் ஏ.மன்சூா் உள்ளிட்ட மாவட்ட நீதிபதிகள், சட்டத்தரணிகள், பொலிஸ் திணைக்கள உயா் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனா்.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம்,
மக்களது காலடிக்கு சேவையை கொண்டு செல்லும் அரசின் திட்டத்தின் கீழும் நிந்தவூர் மக்களின் தேவையை கருத்தில் கொண்டும் அங்கும் சுற்றுலா நீதிமன்றம் ஒன்றை அவசரமாக திறக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதேவேளை நிந்தவூர் ஒலுவில் மக்களின் தேவையை கருத்தில்கொண்டு நிந்தவூருக்கும் ஒலுவிலுக்கும் இடையில் நிரந்தர பொலிஸ் நிலையம் ஒன்றை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அம்பாறை நீதி நிர்வாக பிரதேசத்துடன் இணைக்கப்பட்டுள்ள இறக்காமம் பிரதேசத்தை அப்பிரதேச மக்களில் அநேகர் தமிழ் பேசுபவர்களாக இருப்பதால் இறக்காமம் பிரதேசத்தை அக்கரைப்பற்று நீதி நிர்வாகத்துடனும் பொத்துவில் பிரதேசத்துடன் இணைந்துள்ள திருக்கோவில் பிரதேசத்தை அக்கரைப்பற்று நீதி நிர்வாகத்துடனும் இணைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment